பக்கம்:சிந்தனை வளம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனை வளம் 127

சுமைகளும் அதிகம். ஒரு வகையில் அடிமைக்குப் பொறுப் புக்களே இல்லை. சுதந்திரமாக இருப்பவனுக்கோ அந்தச் சுதந்திரத்தையும், தன்னையும் சேர்த்துக் காப்பாற்றிக் கொள்வதற்கே பல பொறுப்புக்கள் இருந்தாக வேண்டும். இல்லாவிடில் சுதந்திரம் நீடிக்காது. -

குடும்பம், வரவு-செலவு எல்லாம் தந்தையின் கையில் இருக்கிற வரை ஒரு மகனுக்குக் கவலையும் பொறுப்பும் குறைவு. ஆனால், அவை அந்த மகனின் கைக்கே வந்த பின் வரவு-செலவு மட்டுமே கை மாறவில்லை. பொறுப்பும் கவலை யம் கூடக் சுைமாறுகின்றன என்றுதான் .ெ கா ஸ் ள வேண்டும். -

ஆனல், நம் நாட்டில் இப்படிக் கொள்ளவில்லை. சுதந். திரத்தை அதிகப் பொறுப்பு என்பதாகப் புரிந்து கொள் ளாமல் அதிகப் பொறுப்பின்மை என்பதாகவே பெரும் பாலும் நாம் புரிந்து கொண்டிருக்கிருேம். இந்த அர்த்த பேதம் அல்லது அனர்த்தம் சுதேசித் தன்மை கொண்டதே. உழைப்பு அதிகம் தேவைப்படுகின்ற காலத்தில் உழைக் காமலிருக்கச் சுதந்திரம், படிக்க வந்த கல்லூரி, பள்ளிகளி ல் படிக்காமலிருக்கச் சுதந்திரம், விசுவாசமாயிருக்க வேண்டிய எல்லா இடங்களிலும் விசுவாசமாயில்லாமல் இருக்கச் சுதந். திரம் என்று, சுதந்திரம் என்ற வார்த்தை இப்போது கொச்சைப் படுத்தப்படுகிற இடங்களை ஒவ்வொன்ருகப் பார்த்தீர்களானல் இது உங்களுக்கு மிகவும் சுலபமாகவே புரியும், -

'அடிமைத்தனத்திலிருந்து விடுபடப் போராடிச் சுதந்: திரம் அடைந்தோம். அதற்குப் பின் என்ன செய்வது, எப்படி முன்னேறுவது என்றெல்லாம் புரியாத காரணத் தால் சுதந்திரத்திற்கே அடிமையாகிப் பேசாமல் இருந்து விட்டோம்’-என்று என் நண்பர் ஒருவர் அடிக்கடி சொல் லுவார். அது ஓரளவு உண்மையாகவே படுகிறது.

நாம் புரிந்து கொண்ட சுதந்திரத்திற்கு-அதாவது தான் தோன்றித்தனத்திற்கு-நாமே அடிமையாகி விட்டோமோ என்றுதான் தோன்றுகிறது. சுதந்திரத்தின் பரிபூரண"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/129&oldid=562371" இலிருந்து மீள்விக்கப்பட்டது