பக்கம்:சிந்தனை வளம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 சிந்தனை வளம்

உபாசகன் என்பவன் சொல், செயல், சிந்தனை, எதலுைம் எந்த விநாடியிலும் பிறரை அடிமைப்படுத்த முயலக் கூடாது. பிறரை வார்த்தையாலோ செயலாலோ,சிந்தனை யாலோ அடிமைப்படுத்த முயலாமலிருந்து வருவது என்பது, தான் சுதந்திரமாயிருப்பதிலும் ஒரு சுதந்திரவாதி .யின் முக்கியக் கடமையாகும்.

பிறர் மீது வலிந்து திணிக்கும் நிர்ப்பந்தங்கள் எல்லாமே அடிமைத்தனம்தான். நம்மை யாருமே நிர்ப்பந்தப்படுத்தக் கூடாது என்று நினைக்கிற நாம், பிறரை நிர்ப்பந்தப்படுத்த முயலும்போது செளகரியமாக அதை மறந்து விடுகிருேம்.

இந்நாட்டு அரசியல், மதம், இலக்கியம், சமூகம், கல்வி எதிலும் நிர்ப்பந்தங்களற்ற சூழ்நிலையோ, சுதந்திரத் தென்றலோ கண்ணுக்கெட்டிய தூரம் வரை தென்பட வில்லை. மூன்று மாமாங்க காலமாக இதுதான் நிலையா?

எந்த மத ஆசார அனுஷ்டானங்களையும் கடைப்பிடிக்கா மல் இருக்க ஒருவனுக்குச் சுதந்திரம் உண்டு. அவன் தாரளமாக நாஸ்திகளுக இருக்க முடியும்.

ஆனல், ஏதாவதொரு மத ஆசார அனுஷ்டானத்தை நம்பிக் கடைப்பிடிப்பவனைக் கிண்டல் செய்து பயமுறுத்தும் உரிமையும் தனக்கு இருப்பதாக ஒரு நாஸ்திகன் நினைத் தாலோ, செயல்பட்டாலோ, பேசினலோ நிர்ப்பந்தம் பிறந்து விடத்தான் செய்யும். இந்த நிர்ப்பந்தமே அடிமை நிலைமையின் முளை.

"நான் நினைத்தபடி நினைத்த விதத்தில் சுதந்திரமாக இருப்பேன். அதே சமயத்தில் எனக்கு வேண்டாத இன்னொருவனை அப்படி இருக்க விடமாட்டேன்’-என்பது தான் சர்வாதிகார அடையாளம். எங்கெல்லாம் சுதந்திரம் ஒருவழிப்பாதையாக இருக்கிறதோ அங்கெல்லாம் சர்வாதி காரமும் இருக்கும். மதத்தைப் புறக்கணிப்பது மத சுதந்திரம் என்ருல், பிறரை வருத்தாமல், அதை வெறி யோடு விரும்பிக் கடைப்பிடிப்பவனே அந்தச் சுதந்திரத்தி லிருந்து விடுபடச் சொல்லி நிர்ப்பந்தப்படுத்துவதை என்ன வேன்பது? - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/130&oldid=562372" இலிருந்து மீள்விக்கப்பட்டது