பக்கம்:சிந்தனை வளம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனை வளம் 129.

இங்கே உள்ளுர் பண்டார சந்நிநிதிக்கோ, சாமியார்களுக்கோ மாலை போடுவதும், தரிசிப்பதும்கூட மூட நம்பிக்கை என்று முழங்கும் பரம பகுத்தறிவாளர்களும், வெளிநாடு போனுல் ரோமாபுரியில் வாடிகனுக்குப் போய். போப்பாண்டவருக்குப் பச்சை ஏலக்காய் மாலை போட்டு, அவரோடு நின்று படமும் பிடித்துக் கொண்டு வர முடிய. லாம். போப்பாண்டவரைக் குறை சொல்லவில்லை. நம்மூர் பகுதித்தறிவாளர்கள் உள்ளுரில் பிறர் தம் இஷ்டப்படி வழிபடும் வழிபாடுகளைக் குரு பக்தியைக் கிண்டல் செய்து விட்டுத் தாங்கள் மட்டும் தேவையானபோது ஃபாரின் சுவாமிகளோடு மாலையணிந்து போட்டோ எடுத்துக் கொள்ளும் சுதந்திரத்தை எடுத்துக் கொள்கிருர்களே என்பதைத்தான் சுட்டிக்.காட்டினேன். -

'நான் எங்கே எப்படி வேண்டுமானலும் இருப்பதற்குச் சுதந்திரம் உண்டு. நீங்கள் மட்டும் இன்ன இன்ன விஷயத் தில் இப்படி இப்படித்தான் இருந்தாக வேண்டும்’-என்பது. என்ன சுதந்திரமோ புரியவில்லை. -

இன்னும், வாக்களிக்கும் வாக்காளர்களைவிட அவர்கள். வாக்கைப் பெறும் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் அதிக சுதந்திரத்தை அனுபவிக்க முடிந்த நாடு இது. வாக்குகளைப் பெற்று ஜெயித்து விட்டால், அப்படி ஜெயித்து விடுகிற வேட்பாளர் தாம் நின்று ஜெயித்த கட்சி சின்னம் ஆகிய வற்றைப் பற்றிக் கவலையேபடாமல் ஐந்து வருஷங்களுக்குள் தமக்கு லாபமுள்ள எந்தக்கட்சிக்கும் தாவுகிற சுதந்திரத்தை. என்னவென்பது? ஐந்து வருடங்களுக்கு வாக்காளர் ஒரு சுதந்திரமும் இன்றித் தவிக்க (தகுதியற்ற வேட்பாளரைத் திருப்பியழைக்கும் சுதந்திரம்கூட இல்லாமல்) வேட்பாளர் அபரிமிதமான பல சுதந்திரங்களைப் பெற்றுப் பயனடை. கிருரே அதை எந்தச் சுதந்திர வகையில் சேர்ப்பது, எப்படி ஏற்பது? - -

சுதந்திர இந்தியாவிலும் தங்கள் வரிப் பணத்திலிருந்து, தங்கள் சொத்தான பொது வசதிகளாக உருவாக்கப்பட்ட பஸ்கள், இரயில்கள், தபாலாபீஸ்கள், தந்திக் கம்பங்களை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/131&oldid=562373" இலிருந்து மீள்விக்கப்பட்டது