பக்கம்:சிந்தனை வளம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 30 சிந்தனை வளம்

அழிக்கவும், எரிக்கவும் சில மக்கள் சுதந்திரம்’ எடுத்துக் கொள்கிருர்களே அதை எந்தப் பிரிவில் வைத்து எண்ணுவது? -

சுதந்திரம் என்ற பேரில் சில அராஜகங்களும், உரிமை என்ற பேரில் சில உபத்திரவங்களும் பெருகிவிட்டதனல் தான் எது அசல் சுதந்திரம், எது அசல் உரிமை என்று நம்மால் விளங்கிக் கொள்ள முடிவதில்லை.

பஸ் ஸ்டாண்டில் சிவனே என்று காத்து நிற்கிற யுவதி யிடம் நாலைந்து இளைஞர்கள் வந்து கேலி பண்ணி வம்பு செய்தால் கண்டிக்க முடியவில்லை. 'இளைஞர் உரிமை' என்று குரல் எழுகிறது. யுவதியின் உரிமை' என்ன ஆவது? ஒருவரை அவமானப்படுத்தி மற்ருெருவர் அடையும் எதுவும் சுதந்திரமோ, உரிமையோ ஆகாது. பிறரைச் சுதந்திரமாக இருக்க விடாதபடி தடுத்து நாம் அடையும் சந்தோஷம் பாவகரமானது என்பது புரிந்தாலொழியச்

சுதந்திரத்தின் தத்துவமும் நமக்குப் புரியாது.

இங்கு நம் சுதந்திரத்தை நாம் புரிந்து கொள்ளும் முன் பிறர் சுதந்திரத்தைச் சகித்துக் கொள்ளப் புரிந்து கொள்ள வேண்டும். பிறர் சுதந்திரமாயிருப்பதைச் சகித்துக் கொள்ளக்கூட முடியாமல் நாம் சுதந்திரமாயிருக்க ஆசைப் படுவதற்குத்தான் அடக்கியாளுவது' என்று பெயர்.

நம் தலைவர்களில், சிவில் சர்வீஸிலுள்ள பெரிய அதிகாரிகளில், மந்திரிகளில் எத்தனை பேருக்குப் பிறர் சட்டத்துக்குட்பட்ட நியாயமான சுதந்திரத்தோடு இருப் பதைச் சகித்துக் கொள்ளும் குணம் இருக்கிறது என்று ஒரு சாம்பிள் சர்வே' செய்தீர்களாயின், சுதந்திரத்தை இந்த 32 வருஷங்களாக நாம் எப்படிப் புரிந்துகொண்டிக்கிருேம்புரிந்து கொள்ள வைத்திருக்கிருேம் என்பது உடனே விளங்கி விடும். சக்தியுள்ளவர்களோ, சக்தியில்லாதவர்களோ, ஏழைகளோ, பணக்காரர்களோ, நம் கருத்துக்கு ஒத்தவர் களோ, ஒவ்வாதவர்களோ, நமக்கு வேண்டியவர்களோ, வேண்டாதவர்களோ-யாராயிருந்தாலும் சட்டத்துக்குட் பட்ட நியாயமான நல்வாழ்க்கை வாழ்ந்து சந்தோஷமா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/132&oldid=562374" இலிருந்து மீள்விக்கப்பட்டது