பக்கம்:சிந்தனை வளம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனை வளம் 1 ?邑。

ஆளிக்கத் தொடங்கி விட்டிருக்கிருர்கள். உலகம் முழுவதும் உள்ள தனியார், சர்க்கார் அலுவலகங்களில் உண்டு, இல்லை, முடியும், முடியாது’ என்ற சொற்கள் மட்டுமே :பதிலாகக் கிடைக்கும். லெட் அஸ் ஸி, ஐ வில் கோத் ரூதி பேப்பர்ஸ், அண்டர் கன்விடரேஷன், நாட் யெட் டிலைடட்' போன்ற அற்புதமான மந்திரச் சொற்ருெடர் .கள் இந்திய அதிகார வர்க்கத்தினரின் (அபூர்வ ச் சொற்ருெடர்கள்) பொன் முட்டைகளாக மதிப்புப் பெறுபவை.

மக்கள் விழிப்பு உணர்ச்சியோடு கவனிக்கா விட்டால் விழித்துக் கொண்டிருக்கும் போதே அவர்கள் தொடையில் கயிறு திரிக்கத் தெரிந்த அரசியல்வாதிகளும், தலைவர்களும், கட்சிகளும் உள்ள நாடு இது. -

ஆகவே, மக்களில் ஏமாறுகிறவர்களின் எண்ணிக்கை குறைய வேண்டுமாயின்-திசை திருப்பல் பேர் வழிகளைத் தட்டிக் கேட்க அவர்கள் திராணி பெற வேண்டும். அவசிய மற்ற பயமும் அநாவசியமான மரியாதைகளும் போளுல் தான் அந்தத் திராணி வர முடியும். நம் ஜனங்களுக்கு அது வருமா? வரமுடியுமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/137&oldid=562379" இலிருந்து மீள்விக்கப்பட்டது