பக்கம்:சிந்தனை வளம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனை வளம் 137

சமீபத்தில் ஒரு கூட்டத்திற்குப் போயிருந்தேன். அது அரசியல் கூட்டமா, இலக்கியக் கூட்டமா என்று சொல்வது

முடியாத காரியம்.

கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தவர், திடீரென்று விழிகளில் சிவப்பேறி, அனல் பறக்க வலது கை முஷ்டியை மடக்கி மேடையில் ஒரு குதி குதித்து மல்யுத்த வீரரைப் போல் பாய்ந்து சீறி, "தமிழின் எதிரிகளைக் கொன்று குடலேப் பிடுங்கி மாலை சூடத் தயாராகுங்கள் தமிழ்த் துரோகிகளின் வாழ்வுக்கு முடிவு கட்டப் புறப்படுங்கள்’’ என்று மூச்சைப் பிடித்துக் கொண்டு கத்திக் கூப்பாடு போட் Ա-քTIT -

நான் தமிழின் எதிரி இல்லை என்ருலும் எனக்குப் பயமாக இருந்தது. எனக்கு மட்டுமில்லை. எல்லோருக்குமே பயமாக இருந்தது. பேச்சாளர் நரசிம்மாவாதாரம் (777 திடீர் ரகம்) எடுத்து, இல்லாத இரணியனின் கற்பனைக் குடலைப் பிடுங்கும் முயற்சியில் நிழல் சண்டை போட்டதுதான் காரணம்.

அவருடைய அரசியல் எதிரிகளைத் தாக்குவதற்கு அவர் மேற்கொண்ட தாக்குதல் கணையாகத் தமிழ் பயன் பட்டது. உண்மையில் அவரால் தாக்கப்பட்ட கட்சிக் காரர்கள் மேடையில் பேசும்போதும் கூட, சாவில் தமிழ் படித்துச் சாகவேண்டும்-எங்கள் சாம்பல் தமிழ் மணந்து வேக வேண்டும்’-என்றுதான் வாய்க்கு வாய் முழங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களும் தமிழ்த் துரோகிகளையும், தமிழ் எதிரிகளையும் தீர்த்துக் கட்டப் போவதாகத்தான் சவால் விட்டுக் கொண்டிருந்தார்கள். இவர்கள் நோக்கில் அவர்கள் தமிழ்த் துரோகிகள். அவர்கள் நோக்கில் இவர்கள் தமிழ்த் துரோகிகள். தமிழ்த் துரோகி களை எதிர்ப்பது என்ற பாவனை இருவருக்குமே தேவை. -

பார்க்கப் போனுல் தமிழின் எதிரிகள் என்று இன்று யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. தமிழ் தெரிந்தவர்கள், தமிழ் தெரியாதவர்கள் என்ற இரு பிரிவினர்தான் இருக் கிருர்கள். இன்னும் வெளிப்படையாகச் சொல்லப் போனுல் வெறும் தமிழ் உணர்ச்சி மட்டுமே உள்ளவர்கள். தமிழ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/139&oldid=562381" இலிருந்து மீள்விக்கப்பட்டது