பக்கம்:சிந்தனை வளம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனை வளம் 置岛9

ஆளுல். இத்தனை கட்சிகளும், இத்தனை பேரும் சேர்ந்து எதிர்க்கிற அந்தச் சமூக விரோத சக்திகள்தான் யாரென்று தெரியவில்லை! நீங்களாகச் சுட்டிக்காட்டவும் மாட்டேனென் கிறீர்கள்! உண்மையில் அவர்கள் யார்?

'ஒன்று உங்கள் அத்தனை பேரிலுமே சமூக விரோத சக்திகள் ஊடுருவியிருக்க வேண்டும். அல்லது அது எங்குமே இல்லாததாக இருக்க வேண்டும்!’ என்றேன்.

என் கேள்விக்கு அவர் மிகவும் சுலபமாகப் பதிலளித்து விட்டார்.

'சுருக்கமா ஒண்ணு வச்சுக்குங்க! நம்ம எதிரிங்களே நாம குறிப்பிடற வார்த்தை அது. நம்ம கட்சி ஆளுங் களுக்கு ஒரு மொரேல் பூஸ்டரு’க்காகவாவது நாம அடிக்கடி இப்படிச் சொல்லியாகணும்! நமக்கு வேண்டாத வங்களை நாம திட்டறதுக்கு சமூக விரோத சக்திகள்’ங் கிறது ஒரு தோதான வார்த்தை; அவ்வளவுதான்.’’

இவருடைய பதிலே வைத்துப் பார்த்தால் சமூக விரோத சக்திகள் அல்லாதவர் யார் என்பதைப் புரிந்து கொள்வது சிரமம்.

இன்னெரு தலைவர் கொஞ்சம் நிதானமானவர். நல்லவர். கொள்கைகளைப் பற்றி நிற்பவர். அவர் விரிவான பட்டியலே கொடுக்க முன் வந்தார்.

சுரண்டுவோர், கள்ளச் சாராயம் காய்ச்சுவோர், கடத்தல்காரர்கள், வெறியர்கள், வன்முறையாளர்கள்’’ என்று சமூக விரோத சக்திகளைச் சுட்டிக் காண்பித்தார்.

தயவு செய்து இவர்கள் அறவே இல்லாத கட்சிகளின் பெயர்களைச் சொல்ல முடியுமா?’ என்று நான் கேட்ட போது, அவ்வளவு உற்சாகமாக அவரால் எனக்கு உடனே பதில் கூற முடியவில்லை. -

ஆகவே, சமூக விரோத சக்திகளோடு போரிடுவதுஎன்ற மேடை முழக்கமும் ஒரு நிழல் யுத்தமாகவே எனக்குத் தோன்றியது. இத்தனை நாட்களாக இத்தனை கட்சி கிள் தொடர்ந்து போரிட்டும் சமூக விரோதிகள் அழியாததி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/141&oldid=562383" இலிருந்து மீள்விக்கப்பட்டது