பக்கம்:சிந்தனை வளம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 4 0 சிந்தனை வளம்

லிருந்து அது நிழற் சண்டையாகத்தான் இருக்க வேண்டும் என்று புரியவில்லையா?

அரசியல் சமுதாயப் பிரமுகர்கள் மட்டுமின்றி, நமது எழுத்தாளர்கள், கலைஞர்கள், நாடகாசிரியர்கள், திரைக் கதாசிரியர்கள் முதலியோரும் : கால் நூற்ருண்டுக்கும் மேலாகச் சமூக விரோத சக்திகளை எதிர்ப்பது என்ற நிழல் யுத்தத்தைத் தொடர்ந்து நடத்திக் கொண்டுதான் வருகிருர் # āp ,

எதிரியும் சாகாமல், எதிர்ப்பவரும் தளராமல் ஒரு யுத்தம் தொடர்ந்து நடக்க முடியுமானல் அது நிழல் யுத்த மாகத்தானே (Shadow Boxing) இருக்க முடியும்?

வறுமை ஒழிப்பு, மூடநம்பிக்கைகளே ஒழிப்பது, அடித் தளத்து மக்களின் வாழ்க்கை நிலை உயரப் பாடுபடுவது. பொருளாதார சமத்துவத்தை உண்டாக்குவது, ஏற்றத் தாழ்வைப் போக்குவது போன்ற மெய்யான இலட்சியங்களை யும் கூட இந்நாட்டு அரசியல்வாதிகள் தொடர்ந்து நிழல் யுத்தங்களாகவே ந ட த் தி வருகிரு.ர்கள். எதிர்க்க வேண்டியதை இனங் கண்டு குறி வைத்து உடனே எதிர்த்து அழிப்பதைவிட, அழிப்பது போல் பாவிப்பது என்பது இங்கே கை வந்த கலையாகி விட்டிருப்பதுதான் காரணம்.

பாவனையும், பாசாங்கும் இருப்பதால்தான் தெருவுக்குத் தெரு மளிகைக் கடைகளைப் போல் தனித்தனிக் கட்சிகளும், கல்லாப் பெட்டிகளைப் போல் தனித் தனித் தலைவர்களும் பெருகியிருக்கிரு.ர்கள். -

குறிப்பிட்ட எதிரியோடு, சிரத்தையாகத் தொடங்கி நேரத்தில் முடிக்கும் போருக்குத்தான் வெற்றி, தோல்வி, முடிவு உல்லாம் உண்டு.

எதிரி யாரென்றும் தெரியாமல், சில சமயங்களில் எதிரி களே இல்லாமல், இன்ன நேரத்தில் இப்படி முடிய வேண்டும் என்ற சிரத்தையும், அக்கறையும் இல்லாமல் வழவழ என்று நடக்கும் போராட்டங்கள் ஒருபோதும் முடிவதில்லை. - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/142&oldid=562384" இலிருந்து மீள்விக்கப்பட்டது