பக்கம்:சிந்தனை வளம்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிந்தனை வளம் 147

மீறலை, ஒழுங்கு மீறலைக் கண்டு கொள்ளாமல் இருந்து விடுவதும், யாரும் நிச்சயமாகப் பரிந்து கொண்டுவர மாட்டார்கள் என்பதுபோல், அநாதைகளைப் பொறுத்த மட்டில் மிகச் சிறிய சட்டம் ஒழுங்கு மீறலைக்கூடப்.பெரிது படுத்தித் தண்டிப்பதும் போலீஸாரின் வழக்கமாகி விட்டது. சில ஊர்களில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வசமே கஞ்சாப் பொட்டலம், அபினிப் பொட்டலம் எல்லாம் தயாராக இருக்கும். யாராவது ஒரு வேண்டாத ஆளே அல்லது விரோதி யைப் பிடித்து உள்ளே தள்ள வேண்டுமென்ருல் இந்தக் கஞ்சாவையோ, அபினியையோ அவன் வைத்திருந்ததாக எஃப். ஜ. ஆர். எழுதப்படும். கிராமங்களிலும் சிற்றுார் களிலும் இன்னும் இப்படி நடக்கிறது. கள்ளச் சாராயம், விபச்சாரம் இதிலெல்லாம் கண்டுகொள்ளாமல் இருப்ப தற்காக கமிஷன், மாமூல் எல்லாம் வாங்கும் போலீசார் கூட இருப்பதாகப் பேசப்படுகிறது. மாமூல் பிரச்னையிலி ருந்து சில ஊர்களில் சைக்கிள் ரிக்ஷாக்காரர்களுக்கு விடுதலை கிடைத்து விட்டது. பெரும்பாலான சைக்கிள் ரிக்ஷாக்கள் சில ஊர்களில் போலீஸ்காரர்களுக்கே சொந்தமாக இருக்கிற தாம். மாமூல் தருவதாயிருந்தால் சொந்தக்காரருக்குச் சேர வேண்டிய வசூல்தான் குறையும். இதல்ை ரிக்ஷாக் காரர்களுக்கு அதிக வசதி. ஒரு தொந்தரவும் இராது.

போலீலை, ஒரு கட்சிச் சார்புள்ள சாதனம் போல் காட்ட ஆளும் கட்சிகளும் முயலக் கூடாது. எதிர்க் கட்சிகளும் அப்படிச் சித்திரிக்க முயலுவதை நிறுத்த வேண்டும்.

மனிதனைப் பயமுறுத்தியே நல்லவனாக இருக்கச் செய்ய முயலுவதை விட, அவனே விரும்பி நல்லவகை நடந்து கொள்ளச் செய்ய வேண்டும். பிரமுகர்களும், தலைவர்களும், அரசியல்வாதிகளும் மகத்தான சட்ட மீறுதல்களைப் புரியும் போது, வாலைச் சுருட்டிக் கொண்டு சும்மா இருந்துவிட்டு அப்பாவிக் கல்லூரி ஆசிரியர், வக்கீல், டாக்டர், மாணவர் களிடம் iருப்புக் காட்டிக் கெட்ட பெயர் சம்பாதிப்பதி லிருந்து போலீஸ்காரர்கள் இனியாவது விடுபடவேண்டும். தவறு செய்தவர் யாராயினும் தண்டிக்க முன்வர வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/149&oldid=562391" இலிருந்து மீள்விக்கப்பட்டது