பக்கம்:சிந்தனை வளம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

互56 சிந்தனை வளம்

கொஞ்சம் அநாவசியமானவையும் கூட. தேசிய மொழி களும், நம் நாட்டைச் சேர்ந்தவையுமான சம்ஸ்கிருதமும், இந்தியும் வெறுக்கத்தக்கவை என்னும் மனப்பான்மை தமிழ் நாட்டுக்கே உரிய தனிக் குணங்களில் ஒன்ருே என்றுதான் எண்ணப்பட வேண்டியிருக்கிறது. இங்கு அவ்வளவு வெறுப்பு ஆங்கில மொழியின்மேல்கூட உண்டாக்கப்பட்ட வில்லை. -

தங்களுக்கென்று தனித்தன்மையும் தேசிய கலாசாரப் பிணைப்பும் உள்ள வங்காளிகளிடமும் மலேயாளிகளிடமும் சம்ஸ்கிருத வெறுப்போ, இந்தி வெறுப்போ இல்லாத அழுத்தமான தாய்மொழிப் பற்று இருப்பதைக் கவனிக்க வேண்டும். ஆங்கில மோகமோ, ஆங்கில வெறுப்போ கூட அவர்களிடம் இல்லை. -

நல்ல ஆங்கிலத்தில் சரளமாக உரையாடுவதை இல வாகவும், சுகமாகவும், உல்லாசமாகவும் செய்ய முடிந்த இரண்டு மலையாளி ஐ ஏ.எஸ். ஆபீசர்கள் சந்தித்துக்கொண் டால் தங்களுக்குள் மலையாளத்தில் தான் பேசிக் கொள்வார் கள், அதே போல் இரண்டு வங்காளி அறிஞர்கள் சந்தித்துக் கொண்டால் வங்காளி மொழியில்தான் உரையாடுவார்கள். தாழ்வு மனப்பான்மையோடு தப்புத்தப்பான ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருக்கும் நாகரிகமாக உடையணிந்த இரு வரை எங்கே பார்த்தாலும் அவர்கள் நிச்சயமாகத் தமி ழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள்தான் என்று முடிவு செய்யலாம், என என் நண்பர் ஒருவர் அடிக்கடி சொல்வது வழக்கம். அது பெரிதும் உண்மை என்றே படுகிறது எனக்கு. -

இந்தியாவின் எல்லாத் திசைகளிலும், எல்லாப் பிர தேசங்களிலும் சமய கலாசார அந்தஸ்தைப் பெற்றுள்ள புராதனமான சம்ஸ்கிருத மொழியை வடமொழி என ஒரு திசையில் மட்டுமே குறுக்கி அழ்ைக்கும் விநோதம் தமிழ் நாட்டுக்கே உரியது. உண்மையில் சம்ஸ்கிருதம் அகில உலக மொழி. வடமொழி மட்டுமல்ல; சர்வதேச மொழி களில் ஒன்று அது. - .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/152&oldid=562394" இலிருந்து மீள்விக்கப்பட்டது