பக்கம்:சிந்தனை வளம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

五5垒 சிந்தனை வளம்

மிகைப்படுத்தும் குணமே தெரிகிறது. நாம் படிக்காத அல்லது நம்மால் படிக்க முடியாத ஒரு மொழியை வெறுப், பது, துாற்றுவது, திட்டுவது என்பது ஜனநாயகத்துக்கே. விரோதமானது. ஆனல் நம்பிக்கை, விசுவாசம் இவற். நிற்குப் பதிவாக சகல துறைகளிலும் வெறுப்பு, துவேஷம் இவற்றையே முதலீடு செய்து வளர்ந்த சில அரசியல் கட்சி கள் தமிழ்நாட்டில் இன்னும் அதே லேபிளில் காலந்தள்ள, மக்களை அறியாமை நிறைந்தவர்களாகவே வைத்திருக்க, ஆசைப்படுகின்றன. அறிவு வளர்ந்துவிட்டால் அவர்கள் வியாபாரம் படுத்துவிடும்.

என்ன காரணம்? அறியாமை நிரம்பியிருக்கிற பகுதி களில்தான் வெறுப்பையும் துவேஷத்தையும் பயிரிட முடியும். சில கட்சிகளின் பொருளாதாரத் திட்டம், அரசியல் கொள்கை எல்லாமே வெறுப்பும், துவேஷமும்தான் அறிவு வளர்ந்துவிட்டால் வெறுப்பும் துவேஷமும் மறைந்து போய்விடும். -

எங்கே வெறுப்பும் துவேஷமும் மறைந்து தங்கள் அரசியல் பிழைப்பு நடைபெருமல் போய்விடுமோ என்ற பயத்தில் நன்செய் நிலங்களில்கூட அவசர அவசரமாக வேவிக்காத்தான் விதைகளைத் துரவிக் கொண்டிருக்கிரு.ர்கள் சிலர். மக்களுக்கு இது புரியவேண்டும். மக்கள் ஏமாறு: வதைத் தவிர்க்க வேண்டும். ஏமாறுவதைப்போல் பாவம் வேறில்லை. -

நமது சொந்த தேசத்தின் வேற்று மொழிகளை வெறுத் தால்தான் நம் பிரதேச மொழியை வளர்க்க முடியும் என்ற மனப்பான்மை குழந்தைத்தனமானது. பூனை கண்ணை மூடிக் கொள்வதால் மட்டுமே உலகம் இருண்டு போய்விடாது. கிணற்றுத்தவளை மனப்பான்மை ஒழிய வேண்டுமானல் கண்மூடித்தனம் போகவேண்டும். கண்மூடித்தனம் போக, அறியாமை தொலைய வேண்டும். -

நமது பக்கத்து வீட்டுக்காரன் நண்பன, எதிரியா என்று. அவளுேடு பழகி அறிந்து முடிவு செய்யாமல், பழகாமலே, அவனை எதிரி என்றும் அரக்கன் என்றும், லம்பாடி என்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/156&oldid=562398" இலிருந்து மீள்விக்கப்பட்டது