பக்கம்:சிந்தனை வளம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 நா. பார்த்தசாரதி

சமயங்களில் கல்ச்சர்’ என்ற வார்த்தையையும், "கஸ்டம்ஸ் அண்ட் பிலீஃப்ஸ்’ என்ற வார்த்தையையும் கலந்து குழப்பிக் கொள்வதால்தான் நமக்குப் பல சங்க டங்கள் வருகின்றன. பழக்க வழக்கங்கள், பிரதேசத்திற்குப் பிரதேசம் வேறுபடுகின்றன. ஆனல், கலாசாரமோ, கலா சாரமின்மையோ எல்லாப் பிரதேசத்திலும் ஒரே மாதிரி யாகத்தான் இருக்க நேர்கிறது. உயர் படிப்பு, பண வசதி இவற்ருல்தான் ஒருவர் கல்ச்சர்டு’ ஆக பண்பட்டலராக) இருக்க முடியுமென்று பலர்நினைக்கிரு.ர்கள், சொல்கிருர்கள். இதை இன்று என்னல் ஒப்புக்கொள்ள முடியவில்லை. படிப் பற்ற, பண வசதியற்ற, இரயில் பாதையிலிருந்து முப்பது மைலும், பஸ் ரூட்டிலிருந்து இருபது மைலும் விலகியிருக்க முடிந்த ஒரு கிராமத்தில் சிலரிடம் நான் காண முடிந்த கல்ச் சரை. அல்லது நாகரிகத்தை இந்தியாவின் பிரதம மந்திரி களாயிருந்த-இருக்கிற-சிலரிடம் கூடக் கண்டதில்லை; காண முடியவில்லை. ஜனதிபதிகளைப் பற்றி இப்படி அபிப்பிராயம் சொல்லலாமா கூடாதா என்று எனக்குத் தெரியாது.

நமது புதுடில்லி, பம்பாய், சென்னை, கல்கத்தா-இந்த நகரங்களின் அகலமான, வெளிச்சமான, பகட்டான தெருக்களில் நவநாகரிக உடைகளுடனும், உதடுகளில் அரைகுறை ஆங்கிலத்துடனும் நடமாடிக் கொண்டிருக்கிற பலரிடமும் கலாசார வறுமையும், நாகரிகப் பற்ருக்குறை. யும்தான் மிக மிக அதிகம். நாட்டுப்புறம் என்றும் கண்ட்ரீ என்றும் இவர்களால் வர்ணிக்கப்படுகிற பாமரர்களிடம் உள்ள மென்மையான, இங்கிதமான (நைளிட்டீஸ், பிளிஸிங் மேனர்ஸ்) பல குணங்களை, பப்ளிக் ரிலேஷன் ஸையே ஒரு கலையாகப் பயின்றவர்களிடம்கூடக் காண முடிவதில்லை. -

இங்கே படிக்காதவர்களிடம்கூட நிரம்பிக் காணப்படும் இந்தத் கலாசாரச் செழிப்பு, படித்தவர்களிடமும் நகர வாசிகள் பலரிடமும் ஏன் காணப்படவில்லை என்பதுதான் கேள்வி. நகரவாசிகளிடம் காணப்படுகிற பாசாங்கான நடிப்பு, போலிப் பாவனைகள், ஏமாற்று, வஞ்சனை, மோசடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/16&oldid=562258" இலிருந்து மீள்விக்கப்பட்டது