பக்கம்:சிந்தனை வளம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

758 சிந்தனை வளம்

ஆட்டு மந்தை மனப்பான்மை ஒழிய ஒழியத்தான் இமிடேஷன் புத்தி குறையும். இமிடேஷன் மனப் பான்மையும், ஈயடிச்சான் காப்பித்தனமும் தொலைந்தால் தான் ஒரு சமூகம் அறிவுத் தரத்தில் உயர்ந்து மெருகேற. முடியும்.

ஒரு திரைப்படம் ஒரு தினுசான கதையமைப்புடன் நூறு நாள் இருநூறு நாள் ஒடி வசூலில் வெற்றி கண்டு. விட்டால் வந்தது ஆபத்து. அப்புறம், அதே மாதிரி இமிடேட் செய்து பத்துப் படம் எடுத்து அதன் மரியாதையைக் கெடுத்து விடுவார்கள்.

அறிவு, கலைத்துறைகளில் இப்படி மந்தநிலை, அல்லது ஈயடிச்சான் காப்பி நிலை அடிமை நாட்டில்தான் இருக்க முடியும். தமிழகம் களப்பிரர் ஆட்சியில் சிக்கியிருந்த வரலாற்றுக் காலத்திலும், இந்தியா பிரிட்டீஷ் ஆதிக்கத்தில் இருந்த காலத்திலும் இந்த இருண்ட நிலைமை இருந்திருக் கலாம். இருந்திருப்பது சாத்தியம்.

ஆனல், இன்று சுதந்திர நாட்டிலும் அறிவு, கலை வளர்ச்சித் துறைகளில் புதுக் புதுக் கற்பனைத் திறனும், சுய சிந்தனையும் பெருகவில்லை என்பது வருந்தத்தக்கது. சுய சிந்தனைக் கற்பனைத்திறன், ஒரிஜினலிட்டி, புதியன புனைதல் ஆகியவற்றுக்குச் சீலைப்பேன் மனப்பான்மை முதலில் தொலைய வேண்டும்.

நான் தமிழாசிரியராக இருந்த போது மாணவர்களின் கட்டுரை நோட்டுக்களைத் (காம்போலிஷன்) திருத்தியிருக். கிறேன். ஒரு வகுப்பில் நாற்பது பிள்ளைகள் எழுதிய கட்டுரை நோட்டுக்களையும் படித்தால் 38 கட்டுரைகள் முதல் எழுத். திலிருந்து கடைசி எழுத்து வரை கமா, புல்ஸ்டாப் உள்பட ஈயடிச்சான் காப்பியாக இருக்கும்.

அந்த நாற்பதில் அபூர்வமாகவும், அதிசயமாகவும். ஒன்று அல்லது இரண்டு பையன்களின் கட்டுரை சுயமாக எழுதப்பட்டதாகவும், நன்ருக எழுதப்பட்டதாகவும் இருக் கும். ஈயடிச்சான் காப்பிக்காரன் நூற்றுக்கு நூறு:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/160&oldid=562402" இலிருந்து மீள்விக்கப்பட்டது