பக்கம்:சிந்தனை வளம்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27, ಊಹಿತ5ir Tigah அப்பாவிகள்

மக்கள் தீர்ப்பு, மக்கள் விருப்பம், மக்கள் ஆதரவு என்றெல்லாம் சில வார்த்தைச் சேர்க்கைகளை அரசியல்வாதி களும், சினிமா தயாரிப்பாளர்களும், பத்திரிகை நடத்துகிற வர்களும், வியாபாரிகளும் அடிக்கடி இங்கே சொல்லிவரு கிரு.ர்கள். மக்கள் என்ற தனித்தனி விலாசத்தைச் சுட்டாத ஒரு தொகுதியான பெயருக்கு விலாசம் எதுவும் கிடையாது. அவர்கள் எங்கெங்கோ இருக்கிருர்கள். ஆகவே, அவர்களைப் போய் விசாரிக்க முடியாது. பெயர் உள்ள, வீடு வாசல் உள்ள தனித்தனி மனிதர்களுக்குத்தான் விலாசம் உண்டு. அவர்களை விசாரிக்கவும், சந்திக்கவும், விவாதிக்கவும் வாய்ப்பு உண்டு.

"நீங்கள் இப்படித்தான் விரும்புகிறீர்களா? இது தான் உங்கள் தீர்ப்பா?இதுதான் உங்கள் ஆதரவா!’ என்று தனித் தனியே நேரில் போய்க் கேட்க முடியாத தந்திரமான வார்த்தைப் பிரயோகம் மக்கள்’. அப்படியே நீங்கள் போய்ச் சிலரை விசாரித்து, இது எங்கள் விருப்பமில்லை. தாங்கள் இப்படித் தீர்ப்பளிக்கவில்லை. எங்கள் ஆதரவு இதற்குக் கிடையாது’ என்று அந்தச் சிலர் கூறினாலும், எஞ்சியுள்ள பலர் தலையில், மக்கள் விருப்பம் என்றபழியைப் போட்டுவிடலாம். மக்கள்’ என்பது நம் நாட்டு அரசியல், சினிமா, பத்திரிகை, வியாபார உலகத்துக்குக் கிடைத் .திருக்கும் மிக மிகச் செளகரியமான, வளைந்து கொடுக்கக் கூடிய ஒரு வார்த்தை, அதைப்போல் பிளெக்ஸிபிலான .ஜவ்வு மிட்டாய் வார்த்தை வேருென்று கிடைப்பதரிது.

அந்த வார்த்தை கடந்த காலத்திலும் பலமுறை "பிளாக்மெயில் செய்யப்பட்டிருக்கிறது. நிகழ்காலத்தில் அபரிமிதமாகப் பிளாக்மெயில் செய்யப்படுகிறது. எதிர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/162&oldid=562404" இலிருந்து மீள்விக்கப்பட்டது