பக்கம்:சிந்தனை வளம்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனை வளம் 163

கிடைக்காவிடில் திரும்பிவந்து கிடைக்குமிடத்தைத் தேடிப் போய் அதை வாங்குகிருன்.

மனிதர்கள் தனித்தனியாக நல்லவர்களாக இருக்கிறர் கள். தனித்தனியாக அவர்களை நல்லவர்களாக வைத்திருக்க முடியும் போலிருக்கிறது. மக்கள்’, ஜனங்கள்’ என்ற மைதான வார்த்தைக்குள் மந்தையாக அ வ ர் க ளே அடைக்கும்போதே அரசியல், சினிமா, பத்திரிகைக்காரர்கள் அவர்களது தனித்தன்மையை நல்லது கெட்டது பிரித் துணரும் பகுத்தறிவை, அந்தப் பெருங்கூட்டத்து மந்தை யில் அவர்களிடமிருந்து நைஸ்ாக பிக்பாக்கெட்' செய்துவிடு கிரு.ர்கள். -

மக்களுக்குப் பிடிக்கும்-பிடிக்கிறது. ஆகவே செய் .கிறேன்’ என்று சொல்லிக்கொண்டே தனக்குத் தெரிந்ததை -தனக்குப் பிடித்ததைச் செய்யும் பாசாங்குக்காரர்களின் காலம் நடக்கிறது. தனக்குத் தெரிந்த சுமார் ரக விஷயங் களை மக்களுக்குப் பிடித்ததாக லேபிள் ஒட்டி விற்க முயல் வதும், தனக்குத் தெரியாத முதல் ரக விஷயங்களைப் "பத்தாம் பசவிச் சரக்கு’ எனப் பிரச்சாரம் செய்வதும் பத்திரிகை, சினிமா, கல்வி எல்லாத் துறைகளிலும் வந்து கொண்டிருக்கிறது. முதலில் அரசியலில் தொடங்கிய இந்தப் பெரிய நோய் இப்போது எல்லாப் பிரிவுகளுக்கும் பரவிவரு கிறது. எல்லாப் பிரிவுகளிலும் ஏற்கெனவே நாற்காலிகளில் அமர்ந்திருக்கும் நாலாந்தரமான நபர்கள், முதல்தரமான அறிவாளிகள் அந்தப் பக்கம் வந்துவிடக் கூடாதே என்று முன் ஜாக்கிரதையாகப் பயப்பட்டுப் பதறுகிருர்கள். அறிவு போய் இருள் சூழ்ந்துவிடுமோ என்று பயப்படுகிறவர்களை விட அறியாமை இருள்போய் புத்தியின் ஒளி வந்துவிடுமோ என்று பயப்படுகிறவர்களே இங்கு அதிகம் இருக்கிருர்கள் எங்கும் எதிலும் இருக்கிரு.ர்கள்.

ஆனால் இவர்கள் அனைவரும்தான் உண்மையான கோழைகள். தங்களை முன் வைத்து, 'இது என் விருப்பம். ஆகவே இப்படிச் செய்கிறேன்’ என்று சொல்லத் துப்பும், துணிவும் இல்லாதவர்கள், மக்கள் விருப்பம், என்று தங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/165&oldid=562407" இலிருந்து மீள்விக்கப்பட்டது