பக்கம்:சிந்தனை வளம்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 64 சிந்தனை வளம்

சுயநலம் சார்ந்த பயத்தை மக்கள் தலையில் கட்டி ஏமாற்றுகிற மோசடிக்காரர்கள். செய்கிற தவறுகளைத் தன்னேடு அடையாளப்படுத்திக் கொண்டு தைரியமாகச் செய்யும் வீரம் இவர்களுக்குக் கிடையாது. மக்கள் விருப்பம்’ என்ற முகமூடி இவர்களுக்கு எப்போதும் வேண்டும். அந்த முகமூடி இல்லாவிட்டால் இவர்களால் தரக்குறைவான எதையும் செய்ய முடியாமல் ஏதோ இவர் களைத் தடுக்கும். எதளுலோ இவர்கள் தயங்குவார்கள்.

இவர்களை விட மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று கவலையோ, பயமோ இல்லாமல் நடுத் தெருவில் பிறந்த மேனிக்கு நிற்கும் சில பைத்தியங்கள்-மன நோயாளிகள், சுய ப்ரக்ஞையில்லாத புத்தி ஸ்வாதீனமிழந்த கேஸ்கள்-எவ்வளவோ தேவலை. ஏனெனில் அம்மாதிரி சித்த ஸ்வாதீனமில்லாத நிலையில் கூட அதுகள், மக்கள் விருப்பம் இது! அதனல்தான் நடுத் தெருவில் இப்படி நிற்கிறேன்’ என்பதாக ஒருபோதும் கூறுவது கிடையாது. இந்த மக்கள் விருப்பம்’ என்ற முகமூடியே சர்வரோக சஞ்சீவி ஆகிவிடுமானல் குழந்தையைக் கொன்ற கொலை காரன் ஒருவன் கூடத் தனக்கு வேண்டிய இரண்டாயிரம் பேர்களை கோர்ட் வாசலுக்கு ஊர்வலம் வரச் சொல்லி"மக்கள் ஆதரவு எனக்கு இருக்கிறது. நான் செய்த கொலைக்கும் இருக்கிறது’-என்று முழங்கிவிட்டு குற்றவாளிக் கூண்டை விட்டு வெளியேறி ஊர்வலத்திற்கு நடுவே போய் மாலைப் போட்டுக் கொள்ளலாம். பாராட்டு மடல்களை வாசிக்கச் சொல்லி வாங்கிக் கொள்ளலாம்.

ஜலதோஷம் வந்து தடுமம் பிடித்தவனுடைய முக்கில் வாசனைகள் தெரியாதது போல, மக்களை நிரந்தர ஜல. தோஷத்தில் வைத்திருக்க வேண்டும் என்பது இந்தக் கோழைகளின் ஆசை. நல்லது, கெட்டது பிரித்துணரும் அறிவு உணர்ச்சியைக் காயடித்து விட வேண்டும் என்பது இந்தக் குற்றவாளிகளின் ஆசை. இப்படிச் செய்ய வேண்டும் என்ற ஆசைக்கு முதற் காரணம் சுயநலம். சுயநலம். பயத்தை உண்டாக்கும். பயம் தற்காப்பு உணர்வை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/166&oldid=562408" இலிருந்து மீள்விக்கப்பட்டது