பக்கம்:சிந்தனை வளம்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனை வளம் - 16.5

உண்டாக்கும். பிறரைப் பாதுகாக்கவே அவதாரம் செய் தாற் போன்ற பாசாங்கைச் செய்து கொண்டு தன்னை மட்டுமே பாதுகாத்துக் கொள்ளும் அற்புதமான கலைத் திறமையை முதலில் இந்நாட்டு அரசியல் வாதிகள் கண்டு பிடித்தார்கள். இப்போது அந்த அபூர்வமான விஞ்ஞான விவேக சாதனையானது” சினிமாத் தயாரிப்பாளர்கள், பத்திரிகை நடத்துபவர்கள், வியாபாரிகள், பிரசங்கிகள், பிரமுகர்கள் அனைவருக்கும் சகல ரோக நிவாரணமாகப் பயன் பட்டு வருகிறது. பயம், இன்ஃபீர் யாரிட்டி காம்ப்ளெக்ஸ் ஆகியவை காரணமாக ஏற்படும் சுயநலத் தற்காப்பு உணர்வு எப்போதும் தவறுகளைப் பரவலாக்கி நியாயப்படுத்தவும், விஸ்தரிக்கவுமே தூண்டும். தவறுகளைத் தவிர்க்கத் துரண்டாது.

'நியாயம், சத்தியம், தரம், ஒழுக்கம், பக்தி, பணிவு, இதெல்லாம் இனிமே இந்த நாட்டிலே போணியாகாது சார்! காலத்துக்குத் தகுந்த மாதிரிப் போகணும். அதுதான் இன்னிக்கு எடுபடும்.’’ என்று ஏதோ 1979-ம் வருஷத்துடன் நியாயம், தர்மம், ஒழுங்கு தரம், பக்தி, பணிவு, கட்டுப் பாடு, சத்தியம் இவற்றுக்கெல்லாம் யாரோ உடனே நம் நாட்டில் தடை விதித்து அவசரச் சட்டம் கொண்டு வந்து நிறுத்தி விட்டாற் போன்ற பாணியில் பேசுவது முதல் நம்பர் காவித்தனங்களில் சேரும் என்பதை மக்கள் உணர வேண்டும். இங்கே மக்கள் என்பதை அண்டர்லைன் செய்து கொண்டு படியுங்கள். அப்போதுதான் சரியான அர்த்தம் கிடைக்க முடியும்.

ஒரு வேண்டாத நாயை அடித்துக் கொல்லுவதற்கு முன் வெறி நாய்’ என்று அதை 'பிராண்ட்’ செய்து விட்டு "அப்புறம் அடித்துக் கொல்லு'.என்.பார்கள். அது போல் மக்களை ஏமாற்றி மோசடி செய்வதையே கலையாகப் பயின்ற வர்கள், மக்கள் விருப்பம்’, மக்கள் தீர்ப்பு". மக்கள் ஆதரவு மக்கள் என் பக்கம்’-என்று சொல்வியே, மக்களை ஏய்த்துப் பிழைக்க முயல்வது வேடிக்கையிலும் வேடிக்கை தான். - -

சி.-11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/167&oldid=562409" இலிருந்து மீள்விக்கப்பட்டது