பக்கம்:சிந்தனை வளம்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 சிந்தனை வளம்

மக்கள் பிற்போக்கு வாதிகளை ஆதரிக்க மாட் டார்கள்.”

மக்கள் வகுப்பு வாதிகளை அடையாளங் கண்டு கொள்ளும் காலம் வந்து விட்டது.'

மக்கள் மத்தியில் நிலையான ஆட்சியை நாங்கள் தான் அமைக்க முடியும் என்பதை மக்களே உணரத் தலைப்பட்டு விட்டார்கள்’’

என்றெல்லாம் சில அரசியல் வாதிகள் இப்போதே தேர்தலுக்காக மக்களைப் பிளாக் மெயில்’ செய்யத் தொடங்கி விட்டார்கள். பிறர் ஒரு புறமிருக்க, மக்கள் தங்களை எந்தப் போக்கு வாதி.எனச் சொல்லுவார்கள் என்பது பற்றி இவர்கள் ஒரு நாளும் பேச மாட்டார்கள். தாங்கள் நினைப்பதை எல்லாம் மக்கள் நினைப்பதாகப் பேசியே பழக்கப்பட்டவர்கள் இவர்கள். மக்கள் என்ன நினைக்கிருர்கள் என்பதைக் கண்டு சொல்லும் தாட்ரீ டிங்குக்கு இவர்கள் தான் ஸோல் ஏஜென்ஸியா என்ன?

ஜன்னி கண்டு சாகக் கிடக்கும் நோயாளிக்கு என்ன டயட், என்ன சிகிச்சை, என்ன மருந்து என்பதை எல்லாம் டாக்டர்தான் பொறுப்போடு முடிவு செய்து: அளித்து, நோயைக் கொன்று நோயாளியைக் காப்பாற்ற வேண்டுமே ஒழிய மக்கள் விருப்பம்’-என்ற பாணியில் நோயாளி விரும்புகிருன் என்பதற்காக ஜன்னி கண்ட நிலையில் ஜஸ் கிரீம், புரூட் சால்ட், பீச்மெலபா, அரை டஜன் மசால் தோசை, கால் டஜன் வடை, எல்லாம் அவனுக்குச் சாப் பிடக்கொடுத்து பத்திரமாக நோயைக் காப்பாற்றி விட்டு நோயாளியைக் கொன்று விடக்கூடாது. வைத்தியத்தில் முக்கியமான அம்சம், 'அழிக்கப்பட வேண்டியது எது? காப்பாற்றப்பட வேண்டியது எது?’-என்ற கேள்விகள் தான். நோய் அழிக்கப்பட வேண்டும், நோயாளி காப் பாற்றப்பட-அல்லது மீட்கப்பட வேண்டும். அதுதான் மிக மிக முக்கியமான இலட்சியம்.

ஆனால் துரதிருஷ்டவசமாக நமது அரசியல், சினிமா, பத்திரிகைத் துறைகளில் நோய்களைப் பத்திரமாகக் காப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/168&oldid=562410" இலிருந்து மீள்விக்கப்பட்டது