பக்கம்:சிந்தனை வளம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனை வளம் I5

எதிலும் பிஸினஸ் லேக்’காக இருப்பது இவை எல்லாம் இப்போது கிராமங்களுக்கும் பரவுகின்றன என்பதுதான் புதிதாகக் காணும் அபாயம். அர்பனைலேஷன்' என்னும் நகரமயமாதல் இப்படி ரிவர்ஸில் நடைபெற்றுக் கொண்டி ருக்கிறது. -

நாம், நமது கிராமங்களின் இயல்பான, கள்ளங் கப டற்ற சுபாவத்தையும் மெல்ல மெல்ல மாற்றிக் கொண்டி ருக்கிருேம். கலாசாரத்தை இழப்பதற்கு உபகரணங்களான சாதனங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கிராமங்களுக்கும் அனுப்பி வைத்துக் கொண்டிருக்கிருேம், கருணை, அன்பு, பரஸ்பர-உதவி, செளஜன்யம், சிநேகபாவம் இவை எல் லாம் அழிந்து, அழுத்தமான விருப்பு வெறுப்பு, எதிலும் 'அரசியலை நுழைப்பது, அடிக்கடி கலவரங்களை விளைவிப் பது ஆகியவை கிராமங்களிலும் தொடங்கி விட்டன. நம்பிக்கை வறட்சி, எதையும் சந்தேகக் கண்களோடு பார்ப் பது ஆகிய நகரவாசிகளின் பெரும்பான்மைக் குணம், கிராமத்துக்கும் இப்போது போக ஆரம்பித்து விட்டது.

நல்லது எதிலும் நம்பிக்கை, யாரையும் அநாவசிய மாகச் சந்தேகிக்காமல் இருப்பது, வலிய முன் வந்து உதவிகள் செய்வது, கடின உழைப்பைத் தவிர்க்கவோ, தள்ளிப் போடவோ முயலாமை ஆகிய இந்தியக் கிராமவாசி" களின் குணங்கள், நகர மனப்பான்மைகளின் ஊடுருவலால் இப்போது மாறி வருகின்றன. நகரவாசிகள் சிலருக்கு டேபிள் மேனர்ஸ்’ மட்டுமே தெரியும், ஆனால், இந்தியக் கிராமவாசிக்கோ டேபிள், திண்ணை, வரப்பு வயல் வெளி, களே பிடுங்குமிடம் எல்லா இடத்திலும் எப்படி நாசூக்காக நடந்து கொள்ள வேண்டும் என்ற லெளகீகம் இரத்தத் தோடு ஊறிப் போயிருக்கும் என்பதைப் பார்க்கிற யாரும் உடனே புரிந்து கொள்ளலாம். கல்ச்சுரல் ஜடெண்டிடி' என்னும் கலாசாரச் சார்புக்கு இந்தியக் கிராமவாசிகளை உதாரணமாகச் சொல்லலாம் என்ருல் கல்ச்சுரல் எலிய னேஷன்' எனப்படும் கலாசார விலகி நிற்றலுக்கு, அல்லது அந்நியமாதலுக்கு நகரவாசிகளை உதாரணமாகச் சொல்ல.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/17&oldid=562259" இலிருந்து மீள்விக்கப்பட்டது