பக்கம்:சிந்தனை வளம்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 சிந்தனை வளம்

கூட்டத்தில் அமர்ந்திருப்பவர்களைவிட அதிகமான எண்ணிக், கையுள்ள பேச்சாளர்கள் மேடையில் அமர்ந்திருப்பதும் தலைவர் முதல், நன்றி கூறுகிறவர் வரை பேசுகிற ஒவ்வொரு வரும் தங்களைத் தவிர மேடையில் உள்ள மற்றவர்களின் பெயரை ஒன்று விடாமல் சொல்லி விளித்து விட்டுத்தான் பேச்சைத் தொடங்க வேண்டும் என்பதும் உபசார வழக்கு. ஆகி வருகிறது. தலைவர் அவர்களே, நண்பர்களே' என்பது: போல் நாகரிகமாகவும், நாகுக்காகவும் அதைச் செய்தால் பல தர்ம சங்கடங்களைத் தவிர்க்கலாம். பெயர்களை மறந்து விடுவது, சிலரை மட்டும் சொல்லாமல் விட்டுவிடுவது, சொல்லாமல் விட்டுப்போன அந்தச் சிலருடைய மனத்தாங். கல்கள், இவை எல்லாம் ஏற்படாமலிருக்க வேண்டுமாயின் ஆங்கிலத்தில் இருப்பதுபோல் "மிஸ்டர் சேர்மன் அண்ட் ஃபிரண்ட்ஸ்’ என்று அழைக்கத் தொடங்குவதே நாகரிக. மாக அமையும். ஆனல், நாம்தான் எல்லா விஷயங்களிலும் முன் நோக்கிப் போவதற்குப் பதில் ரிவர்ஸில்’ போவதையே நாகரிகமாகக் கருதத் தொடங்கி விட். டோமே?'காட்டு மிராண்டித்தனத்திலிருந்து நாகரிகத்தை. நோக்கிப் போகிருேமா, அல்லது நாகரிகத்தைவிட்டுவிட்டுப் பின் நோக்கி நகர்கிருேமா என்பதே பலவேளைகளில் புரிய வில்லை. -

'உங்கள் பொன்னர் பாத கமலங்களில் வீழ்ந்து வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்’ என்பதுபோல் ஒரு. வாக்கியம் அடிக்கடி தேர்தல் கூட்டங்களில் காதில் விழும். அனேகமாக இந்த வாக்கியத்திலுள்ள அத்தனை சொற்களுக் குமே ஆழ்ந்த அர்த்தம் கிடையாது. வோட்டு வாங்கி: முடிக்கிற வரை வாக்காளர்களிடம் காட்டப்படுகிற பணிவு. என்பது, காரியம் ஆகிறவரை காலைப்பிடி’ என்பது: போன்ற விவகாரம்தான். தமிழ்நாட்டு அரசியலைப் பொறுத்த வரையில், உபசார வார்த்தைகள் சம்பிரதாயத் தொடர்கள், சொல் அலங்கார ஜபர்தஸ்து வகையருக்களைப் பயன்படுத்தாமலே மனதில் பட்டதை அதற்கென்றே இருக்கும் வார்த்தைகளால் அப்பட்டமாகவும், யதார்த்த:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/172&oldid=562414" இலிருந்து மீள்விக்கப்பட்டது