பக்கம்:சிந்தனை வளம்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனை வளம் I 71

மாகவும் பேசியவர்கள் மூன்று பேர். அவர்கள் பேச்சில் உபசார வார்த்தைகள் அநேகமாக இராது. வார்த்தை களோ, அர்த்தமோ டீவேல்யூ ஆகாது. ராஜாஜி, காமராஜ், பெரியார்-இந்த மூன்று பேருடைய பேச்சும் இயல்பானவை, சகஜமானவை, யதார்த்தமானவை. கூட்டத்தையும், மக்களையும் கவர முயலும் 'குரூர நிபுணத் துவம்’ எதையும் இந்த முதியவர்கள் கடைப் பிடித்ததில்லை. பட்டிக் காட்டானுக்கும் எளிதில் புரியக்கூடிய வார்த்தை களேத்தான் இவர்கள் பேசினர்கள். பேசத் தேர்ந்தெடுத் தார்கள்.

ஆனால், இதற்கு நேர்மாருக, முந்திரிப் பருப்பையே பொங்கலாக்குவது போல் ஒரே உபசார வார்த்தைகள், வர்ணனைகள், ஜாலங்கள், சவால்கள், சவடால்கள், சொற் புதர்கள், வார்த்தைக் காடுகள், (அர்த்தமே காணுமல் போகிற அளவு புதரான காடுகள்) ஆகியவற்ருலேயே முழுப் பிரசங்கத்தையுமே அமைத்து மக்களைத் திணற அடிக்கும் பிரசங்கங்கள் பல. பெரும்பாலான பேச்சாளர்களை இதற்கு உதாரணமாகக் கூற முடியும் .

99 தோட்டாக்களைக் குறி தவறி வீளுக்கி 100-வது தோட்டாவில் ஒரு பறவையைச் சுடும் ஊதாரி வேட்டைக் காரன் போல், சொற்களை வீணுக்குவது அவங்காரப் பேச்சுக் களில் இயல்பாக நடக்கிறது.

'கிணற்றுக் கேணிகளிலே பானைக் குடம் கொண்டு மங்கை மடந்தையர் வெள்ளத் தண்ணீர் எடுக்கும் நாடு நகரங்களிலே, ஊர் உலகங்களிலே’ என்பது போல ஒரே அர்த்தத்தில் பல பதங்கள் வீளுக்கப்படுவது இன்றைய மேடை முழக்கங்களில் புதுத் துணை கலாசாரம் போலப் பெருகி வருகிறது. அறிவுள்ளவர்களைப் போல் தோன்றும் பேச்சாளர்கள், அறியாமை நிறைந்த மக்களைப் பிரமிக்க வைக்க இந்த வார்த்தைப் பிரவாகம் உதவி செய்கிறது. வார்த்தைக் கோவையில்தான் அர்த்தம் இருக்க முடியுமே ஒழிய, வார்த்தைப் பிரவாகத்தில் தெளிவான அர்த்தம் எதுவும் இருக்க முடியாது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/173&oldid=562415" இலிருந்து மீள்விக்கப்பட்டது