பக்கம்:சிந்தனை வளம்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i72 சிந்தனை வளம்

இன்றைய தமிழ், எழுத்து, பேச்சு, எல்லாமே ஒரே அடை மொழிகள் மயமாக ஆகி விட்டதோ என்று கவலை யாக இருக்கிறது. ஒரு வேடிக்கைக்காக ஒரு கால்மணி நேரம் சர்க்கவில் குரங்குக்குக் குல்லாய் மாட்டி கப் அண்ட் சாசரைக் கையில் கொடுக்கலாம். எல்லாக் குரங்குகளுமே எப்போதும் குல்லாய் மாட்டிக் கொண்டு ஒட்டலுக்கு வந்து கப்பில் டீ கேட்டால் என்ன ஆகும்? இங்கேயுள்ள பல அடை மொழிகள் குரங்குக்கு குல்லாய் மாட்டி விட்டது போல் வேடிக்கையாக இருக்கின்றன.

நம் இந்தியாவில் அரசியல் தலைவன் எத்தனை எளிமை யாக இருக்க முடியும் என்பதைக் காட்ட ஒரு மகாத்மா காந்தி வந்து தோன்றியது போல், எல்லோருக்கும் இயல் பாகப் புரியக்கூடிய விதத்தில் கோமாளித்தனம் இல்லாமல் மொழியை சகஜமாக எழுதவும் பேசவும் யார் அவதரித்துக் கற்றுத் தரப்போகிருர்களோ தெரியவில்லை.

பெரும்பாலான வேளைகளில் மொழி, நடை, எல்லாம் பயன்படுத்துகிறவரின் ஈ கோ ைவ க் காட்டுவதாகவே உள்ளது. யாருக்குப் பயன்படப் போகிறதோ அவர்களைப் பற்றி இம்மியும் நினைப்பதில்லை. கன்ஸ்யூமரைப் பற்றிக் கவலைப்படாது பொருள்களை உற்பத்தி செய்து தள்ளும் தயாரிப்பாளர்கள் தான் இப்படி ஆடம்பர நடைப் பேச்சாளர்களுக்கு மிகவும் பொருத்தமான உதாரணம் ஆக முடியும். பொருத்தமான வார்த்தைகளால் நினைத்த கருத்தைக் கச்சிதமாகக் கூறும் பேச்சுக்கள்தான் மக்களுக் குத் தேவை. ஆனல் கேட்டவரை மருட்டக் கூடிய சர்க்கஸ் பேச்சுக்களே நம்மிடையில் அதிகம் பேசப்படுகின்றன என்ப தையே இப்படிப்பட்ட பதில்கள் நிரூபிக்கின்றன.

பேசுகிறவர், பீரங்கிக் குண்டுகளைப் பாய்ச்சுகிற வேகத் தில் (வேகம் இல்லாவிட்டால் இங்கு பலரால் பேசவே முடியாது.) உதிர்த்த வார்த்தைப் புதரில் கேட்பவர் அர்த்தத்தைத் தேடித் தேடி அலுத்துப் போக வேண்டியிருக் கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/174&oldid=562416" இலிருந்து மீள்விக்கப்பட்டது