பக்கம்:சிந்தனை வளம்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனை வளம் I75;

அதே விதமான பொய்களைச் சிகரமான நடையில், அலங்காரமான வார்த்தைகளால் ஆயிரம் பேருக்கு. முன்னலோ, பத்தாயிரம் பேருக்கு முன்னலோ ஒருவன் கூற. முடிந்தால், இன்று அவனுக்குப் பெயர் தலைவன் அல்லது தேசத் தலைவன். இதுதான் நடைமுறையாக இருக்கிறது. ஆகவே, நல்லதை ஏன் நல்லது என்றும், தீயதை ஏன் தீயது என்றும் காரண காரியத்தோடு கண்டு தெளியும் அவசியம் இன்றைய அறிவின் மதிப்பீட்டில் இல்லை. -

பலரும், பல பத்திரிகைகளும் இதை நல்லதென்று சொல்கிருர்கள். அதல்ை இதை நல்லதென்று ஆராயாம?ே ஒப்புக்கொண்டு விடுவோம். பலரும் பல பத்திரிகைகளும் இதைக் கெட்ட தென்று சொல்கிருர்கள். அதனல் ஆராயா மலே இதைக் கெட்டதென்று ஒப்புக் கொண்டு விடுவோம்’ என்பது போன்ற போக்குத்தான் இப்போது அதிகம் தெரிகிறது.

மந்தையோடு ஒத்துப் போகிற இந்த மனப்பான்மைக்கு, ஆராய்ந்து பாராமலே முடிவை ஏற்கிற இந்தக் கண்மூடித் தனமான சரணுகதிக்கு வெகு ஜனப் போக்கு, பெரும். பான்மை மனப்போக்கு என்றெல்லாம் நாகரிகமான பெயர் களும், குறியீடுகளும் கிடைத்திருக்கின்றன.

வலிமையான பலர் சொல்லும் அல்லது செய்யும் தவருன ஒன்றைச் சரியான சிந்தனையுள்ள மக்களே எதிர்க்க அஞ்சுகிரு.ர்கள்.

நல்லதை அது ஏன் நல்லது என்று தூண்டித் துருவி ஆராயும் பொறுமையோ தீயதை அது ஏன் தீயது என்று துண்டித்துருவி ஆராயும் பொறுமையோ யாருக்கும் இன்று

ல்லை. இ தப்பித் தவறி அப்படிப்பட்ட பொறுமையும், துறு துறுப்பும் யாருக்காவது இருந்தால் அவர்கள் பொது வாழ்வுக்குப் பயன்படாதவர்களாகவும், இடையூருனவர் களாகவும் கருதப்படுகிரு.ர்கள்.

மதிப்பீடுகள் மாறியிருப்பது தலைமுறை இடைவெளி களில் நன்முக விட்டுத் தெரிகிறது. ஒரு தந்தை , தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/177&oldid=562419" இலிருந்து மீள்விக்கப்பட்டது