பக்கம்:சிந்தனை வளம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

... i. 6 நா. பார்த்தசாரதி

-லாம். நகரவாசிகள் எதிவிருந்தும் அந்நியமாகி விடுவார் கள். மிகவும் சுலபமாகவே அந்நியமாகி விடுவதை அவர் களால் செய்துவிட முடியும். கட்சி விட்டுக் கட்சி மாறு வதையே சுலபமாகச் செய்யும் எம். எல். ஏ.க்கள். எம். பி. க் கள் அதை நகர நாகரிகமாகிய எலியனேஷனிலிருந்துதான் கற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. செல்வம், செல்வாக்கு ஆகியவற்றில் நிமிர்ந்து நிற்கும், புதுவளம் பெற்ற தேசங்கள் சில தங்களுக்குப் பூர்வீகமான கலாசாரம் என்று என்று எதுவுமில்லையே என்பதாக வருந்து .கின்றன, ஏங்குகின்றன.

ஆனால், மிகவும் பழமையான கலாசாரங்களை உடைய நாமோ காசு, பணம் இல்லையே என்று வருந்தி, அவை உள்ள இடங்களைத் தேடிப் புறப்பட்டுக் கொண்டிருக் கிருேம். காசு, பணம் உள்ள தேசங்களிலிருந்து குடுமியும், நாமமும், பஞ்சகச்ச வேஷ்டியும்-ஜிப்பாவுமாக ஹரே ராமா ஹரே கிருஷ்ணு' என்று, கலாசாரத்தைத் தேடி இங்கே வந்து கொண்டிருக்கிருர்கள். இது வேடிக் கைதான். "வீ ஹேட் மணி ஹெட்டெட் லைஃப். வீ வாண்ட் காட் ஹெட்டெட் லைஃப்” என்பது அவர்களது புதிய கோஷமா .யிருக்கிறது. *

வீ வாண்ட் மணி ஹெட்டெட் லைஃப் வீ ஹேட் காட் ஹெட்டெட் லைஃப்” என்பது நமது கோஷமாயில்லை என்ருலும் மனப்பாங்காகவாவது இருப்பதை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். கலாசாரமின்மையையே ஒருகலாசாரமாகப் பரப்பும் விரக்தி இயக்கங்கள் நாட்டில் உருவானது ஒரு காரணம். தலைவர்களில் காந்தியிடம் தென்பட்ட நூறு சதவிகித இந்தியத் தன்மை, அதன் பின் யாரிடமும் தென்படாமல் போனது ஒரு காரணம். காந்தி, படேல், போன்ற தலைவர்களிடம் பெரியபெரிய படிப்புக்குப் குப் பின்பும் இந்தியன்னெஸ்' எனப்படும் இந்தியத் தன்மை, இந்திய பாணியிலான அணுகுமுறை, இந்திய கலா சாரப் பிடிப்பு எல்லாம்ே இருந்தன. பின்பு வரவர மற்ற வேர்களிடம், அது கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/18&oldid=562260" இலிருந்து மீள்விக்கப்பட்டது