பக்கம்:சிந்தனை வளம்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

...] 78 சிந்தனை வளம்

கேற்றவையாகவும் தெரிகின்றன. வேறுவகையில் கூர்ந்து கவனித்தால் பழைய மதிப்பீட்டைப் பலி வாங்கியவை களாகத் தெரிகின்றன. அடிப்படையற்ற மதிப்பீடுகளாகத் தெரிகின்றன.

இப்படிச் சில மதிப்பீடுகளுக்கு அடிப்படை என்ன வென்றே தெரியவில்லை. சில மதிப்பீடுகளுக்கு அடிப்படையே இருப்பதில்லை. சிலவற்றுக்குப் படித்தவன், யோக்கிய மானவன், சிந்திக்க தெரிந்தவன் வேண்டும் என்று மதிப்பீடு செய்கிருர்கள்.

வேறு சிலவற்றுக்குப் படித்தவர்களும், விபரம் தெரிந் தவர்களும், யோக்கியர்களும், பிரயோஜனப்பட மாட்டார் கள் என்று ஒதுக்கி மதிப்பீடு செய்கிரு.ர்கள். மதிப்பீடுகள் காரணகாரிய ரீதியிலும் இல்லை. நிலையான அடிப்படை யிலும் இல்லை.

லஞ்சம் வாங்க அனுமதிக்கா விட்டால், வேண்டியவர் -களுக்குச் சலுகை காட்டாவிட்டால், எந்த அரசியல் கட்சி யிலும் பலர் தங்கி உழைக்க மாட்டார்கள். ஆகவே, ஒவ்வொரு கட்சியும் தங்கள் ஆட்கள் சலுகைகள், லஞ்சம் ஆகியவற்றைப் பெறுவதைக் கண்டு கொள்ளாதது போல் விட்டுவிட வேண்டும்’ என்று ஒரு புது மதிப்பீடு.

கறை படாத கரம், நிர்வாகத் திறன், லஞ்ச ஊழலற்ற ஆட்சி, இவற்றை அளிப்பதாகத் தேர்தல் வாக்குறுதிகள் ஒருபுறம். எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் மதிப் பீடுகள் ஒரே மாதிரி இல்லை. தர்ம நியாயத்துக்குக் கட்டுப் படுகிறவர்’ என்பதை ப்ளஸ் பாயிண்டாக மதிப்பிடுகிறவர் களும் இகுக்கிருர்கள். 'தர்மமாவது நியாயமாவது?... எல்லாம் சுத்தத் பத்தாம் பசலித்தனம்’ என்கிறவர்களும் இருக்கிருர்கள். பரம்பரை நம்பிக்கைகளுக்கும் -நவீன வேகங்களுக்கும் நடுவிலிருக்கிற சமூகம் எங்கெல்லாம் இருக் கிறதோ அங்கெல்லாம் இப்படி மதிப்பீட்டுக் குழப்பமும், தலைமுறை இடைவெளியும் இருக்கத்தான் செய்கின்றன. அளக்கும் அளவு கோல்களின் அடிப்படை ஒரே மாதிரி

-யில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/180&oldid=562422" இலிருந்து மீள்விக்கப்பட்டது