பக்கம்:சிந்தனை வளம்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனை வளம் 17 9

தனிமனிதன் தனி மனிதனிடம் புளுகிளுல் பொய். தனி மனிதன் கோடிக்கணக்கான மனிதர்களை முன்னல் கூட்டி மேடை போட்டுப் புளுகினல் வீர முழக்கம்.

தனி மனிதன் திருடினல் கேவலமான திருட்டு. பொதுப் பதவியில் இருப்பவன் சாமர்த்தியமாகக் கொள்ளையடித்

தால் அது கெட்டிக்காரத்தனமான அரசியல்.

எங்கோ ஒரு தனி மனிதன் நீதி தவறிஞல் அது தப்பு. ஒரு பெரிய தலைவன் எனப்படுவன் நீதி தவறி, நெறி பிறழ்ந்து, அதிரடி அரசியல் நடத்தி மறுபடி தேர்தலில் நின்று வென்றுவிட்டால், அவன் தவறுகளை மக்களே மன்னித்து ஏற்றுக்கொண்டு விட்டதாகவும் மறந்துவிட்ட தாகவும் ஒரு சமாதானம்.

இம்மாதிரி நடக்கும் வேளைகளில்தான் மதிப்பீடுகள் மாறிவிட்டனவா, திரிந்துவிட்டனவா என்ற சந்தேகமே வருகிறது நமக்கு.

ஒன்றை அளக்கும் முறைகள் மாறலாம். அடிப்படைகள் மாறக் கூடாது. இரட்டை அளவு கோல்கள் கூடாது. இரட்டை மதிப்பீடுகளும் கூடாது. பாதுகாப்போடு பத்திர மாகச் செய்யப்படும் தவறுகளைக் கண்டு கொள்ளாமல் இருந்து விடுவதும், பாதுகாப்பும், பத்திரமும் செய்துகொள் வாாமல் தற்செயலாகப் பாமரர் செய்யும் பிழைகளைப்பெரிது படுத்துவதும்தான் சமூக மதிப்பீடு என்ருல், பொறுத்துக் கொள்வதும் ஜீரணிப்பதும் சிரமம்தான். சில தர்மங்கள் திட்டமிட்டுத் தவறுகளாகச் சித்திரிக்கப்படுகின்றன. சில தவறுகள் திட்டமிட்டுத் தர்மங்களாகச் சித்திரிக்கப்படு கின்றன.

ஒன்றை நல்லது என்று புரிந்து கொள்வது மட்டும் அறிவு இல்லை. அது ஏன் நல்லது என்றும் சேர்த்துப் புரிந்து கொள்வதுதான் அறிவு.

ஒன்றைத் தீயது என்று புரிந்துகொள்வதுமட்டும் அறிவு இல்லை. அது ஏன் தீயது என்றும் சேர்த்துப் புரிந்துகொள் வதுதான் அறிவு. - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/181&oldid=562423" இலிருந்து மீள்விக்கப்பட்டது