பக்கம்:சிந்தனை வளம்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. ஜாதிகள் இல்லையடி பாப்பா!

ஜாதி வேறுபாடுகள் ஒழிப்பதாகப் பேசுவதும், எழுது வதும் ஒரு நாகரிகமாகக் கருதப்பட்டு வரும் கால த்தில் நாம் வாழுகிருேம்.கல்விமான்கள் அரசியல்வாதிகள், சீர்திருத்தக் காரர்கள் எல்லாரும் ஜாதி வேறுபாடுகளே ஒழிப்பது பற்றி நிறையப் பேசுகிருர்கள் எழுதுகிருர்கள். அப்படிப் பேசு வதன் மூலமும், எழுதுவதன் மூலமுமே ஜாதி வேறுபாடுகள் வளர்கின்றன. இன்னும் பச்சையாகச் சொல்லப்போல்ை ஜாதிகளை ஒழிப்பதைவிட ஜாதிகள் இருப்பது நமது கல் விக்கு, நமது அரசியல்களுக்கு, நமது தேர்தல்களுக்கு, நமது சீர்திருத்தங்களுக்கு ஒரு சுயநலமான அவசியமாக இருப்பது போல்கூடத் தோன்றுகிறது. ஜாதிகளை மறக்க விரும்புவதை விட நினைவு கூர விரும்புவதில் நம்மவர்கள் அதிக அக்கறை காட்டுகிரு.ர்கள் என்பது மிகவும் கொச்சையான ஓர் உண்மை. கசப்பான நிஜம். நமது தேர்தல்களுக்கு ஜாதி தேவைப்படுகிறது. நமது கல்விக்கு ஜாதி தேவைப்படு கிறது. நமது சமூக சீர்திருத்தத்துக்கு ஜாதி தேவைப்படு கிறது. இதை ஒழிப்பதாகச் சொல்லிக்கொண்டே பிழைக் கிறவர்களுக்கு உண்மையிலேயே இது ஒழிந்துவிட்டால் அப்புறம் "ஒழிப்பதற்கும், ஒழிப்பதாகச் சொல்லிக்கொள்வ தற்கும் ஒன்றுமில்லை’ என்பதாலேயே அவர்களுக்கும் பைத் தியம் பிடித்துவிடுமோ என்றுகூடத் தோன்றுகிறது. காஷ் மீரிலிருந்து கன்னியாகுமரி வரை ஜாதிமத வேறுபாடுகளை வைத்துத்தான் ஒவ்வொரு சிறு அணுவும் அசைகிறது. ஆலுைம் நமது தேசத்தில் ஜாதி மத வேறுபாடுகளே ஒழிப்பது என்பது அரசாங்கங்களுக்கும், இலட்சியவாதி.

சி.--12 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/183&oldid=562425" இலிருந்து மீள்விக்கப்பட்டது