பக்கம்:சிந்தனை வளம்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 சிந்தனை வளம்

அவற்றை அப்பி அழுக்காக்கி விடுவது போல் தான் நமது ஜாதி வேறுபாடுகளை நீக்கும் முயற்சியும் இருக்கிறது. ஒவ்வொருவரும் அவரவர் ஜாதியைத் தவிர மற்ற ஜாதிகளை ஒழித்து விட முயல்கிருேம். -

ஒரு ஆபீஸில், ஒரு பெரிய நிர்வாகி ஏதோ ஒரு குறிப் பிட்ட ஜாதியை, அல்லது இனத்தைச் சேர்ந்தவர் என்று வைத்துக் கொள்வோம். அந்த நிர்வாகியின் ஜாதி அல்லது இனம் அவராக விரும்பி ஏற்றிருந்தாலும், இல்லா விட்டாலும், அவரது பெற்ருேர்கள் ஏதோ ஒர் ஜாதியை அல்லது இனத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் அவரும் அந்தச் சிலுவையைச் சுமக்க நேர்ந்திருக்கிறது. அவருடைய நிர்வாகத்தின் கீழே வேலை பார்க்கும் ஒருவருக்கும் அவருக் கும் ஒரு சிறு மனஸ்தாபம் வருகிறது என்று வைத்துக்கொள் வோம். வேறு நாடாகவோ, வேறு பிரதேசமாகவோ இருக்குமானல், அது ஒரு நிர்வாகிக்கும், ஊழியருக்கும் நடுவேயுள்ள தகராருக, அல்லது இரண்டு தனிமனிதர்களுக்கு நடுவேயுள்ள தகராருக மட்டும்தான் இருக்கும். ஆனல், இங்கே அது உடனே இரண்டு ஜாதிகளுக்கு நடுவிலான சண்டையாக மாறிவிடும். மாற்றப்பட்டு விடும் என்று சொன்னல் பொருத்தமாயிருக்கும் என்று தோன்றுகிறது. நிர்வாகியின் ஜாதியிலுள்ள மற்ற யாரும் அவருடைய தகரா றுக்குக் காரணமாகவோ, துணையாகவோ இல்லையென்ருலும் அனைவரும் மொத்தமாகப் பழிக்கப்படுவது வழக்கம். அதே போல, ஊழியரின் ஜாதியைச் சேர்ந்த வேறு எந்த ஒரு நபரும் ஊழியரின் தகராறுக்குக் காரணமோ, துணையோ, இல்லை என்ருலும், ஜாதியைச் சுட்டிக் குறை கூறுவதன் மூலம் அந்தப் பழிக்கு அனைவரும் நிர்ப்பந்தமாக ஆளாக்கப் படுகிரு.ர்கள். . . . *

ஜாதி வேறுபாடுகள் போய் விடாமல் கட்டிக் காப்பதில் நமது கல்வித்துறை முதல் கருமாதி நடக்கும் இடமான சுடு காடு வரை பக்காவாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/186&oldid=562428" இலிருந்து மீள்விக்கப்பட்டது