பக்கம்:சிந்தனை வளம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனை வளம் I 7°

யாகி விட்டது. இந்தியத் தன்மையோடு இருப்பதே. கேவலம் என்ற மனப்பான்மை ஆதிக்கம் பெற்று வளர்ந்து விட்டது. - -

காந்திக்கும், பட்டேலுக்கும் பின்னர் 1960-க்கும். 1979-க்கும் பின் அசல் கண்டு பிடிப்பாக இந்தியாவில்புதியவர்களால் வளர்க்கப்பட்ட ஒரே ஒரு நவீனமோஸ்தர் கலா (அநாசாரம்) சாரம் கட்சி மாறுதல்கள்தான். இதை வேகமாக வளர்த்த பெருமை முழுவதையும் அவர்களுக்கும், அவர்களைப் போன்ற அரசியல் வாதிகளுக்குமே நாம் தர வேண்டும் என்பதில் யாருக்கும் இரண்டாவது அபிப் பிராயமே இருக்க வழி இல்லை.

இந்த கல்ச்சுரல் பாவர்ட்டி' அல்லது இன்னும் கடுமை. யாகக் கூறப் புகுந்தால் கல்ச்சுரல் பாங்க்ரப்ஸி, நிலைமை. உருவாவதைப் பற்றி யாருமே இங்கு கவலைந்படவில்லை. கலாசார வறுமைகளோ, கலாசார திவால் நிலைமையோ பொறுப்புள்ள யாரையும் மன வேதனைப்படுத்தவில்லை, வடக்கே ஜெ. பி. மொரார்ஜி, தெற்கே ராஜாஜி, காமராஜ் ஆகியோர் கொஞ்சம் இந்த வறுமையைக் களைய. முன் வந்து முயன்ருர்கள் என்று கூறலாம். அவையும் அப். பழுக்கற்ற முயற்சிகள் என்ற அளவோடு மட்டுமே நின்று. போயின. இந்தக் கலாசார வறுமைகளையும், திவால் நிலை. மையையும் எதிர்த்துப் போராடி, தேசத்தை ஒழுங்கு, செய்ய முன் வரும் முழு இந்தியத் தன்மையோடு கூடிய ஒரு. தலைவரைத் தேசம் இன்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. என்று கூறலாமா? 举。

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/19&oldid=562261" இலிருந்து மீள்விக்கப்பட்டது