பக்கம்:சிந்தனை வளம்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனை வளம் I89 ;

கொலை, கொள்ளை, வன்முறை, அத்துமீறல்கள், இனக்: கலவரங்கள் ஆகியவற்றைக் கூட்டம் கூடித் திட்டமிட்டு அமைப்பு ரீதியாகச் செய்கிறவர்கள் தப்பி விடுகிருர்கள். தனி மனிதர்கள் அகப்பட்டுக் கொள்கிருர்கள். -

ஒரு பண்டம் ஒரே தெருவிலுள்ள ஏழு கடைகளில் ஏழு. விதமான விலை வித்தியாசங்களோடு விற்கப்படுகிற நாட்டில் நாம் வாழுகிருேம் ஒரு பண்டம் ரேஷனில் ஒரு விலை, பொதுச்சந்தையில் மற்ருெரு விலை என்று விற்கப்படுகிற நாடு நம் நாடு.

சிலருக்குச் சலுகைகள், சிலருக்குச் சலுகைகளே அற்ற நிலை என்று, நிரந்தரமாக மக்களே இரண்டு பிரிவாக்கி வைத்து விட்டுச் சோஷலிஸம் பேசுகிற தலைவர்கள் உள்ள நாடு நம்முடையது. -

சராசரி ஐநூறு ரூபாய் வருமானமுள்ள ஒரு மத்திய தரக் குடும்பத்தின் ஏழைத் தலைவன் வீட்டுவரி, தொழில் வரி, மின்கட்டணம், தண்ணிர் வரி எல்லாவற்றையும் தேதி தவருமல் கட்டி விட்டு மற்றச் செலவுகளுக்குத் திணறிக் கொண்டிருக்கிறபோது, முழு மின்சாரக் கட்டணத்தையும்" வேறு வரிகளையும் உடனே ர்த்துச் செய்ய வேண்டுமென்று அவனைவிட அதிக வசதி உள்ளவர்கள் கூட்டம் கூடி ஊர்வலம் போய்க் காரியத்தைச் சாதித்துக் கொள்ள முடிந்த நாடு இது. - -

குப்பனே சுப்பனே நீதிமன்றத்துக்குள் போய்க் கூப்பாடு. போட்டு எதிர்ப்புக் குரல்கள் எழுப்பினல் தண்டிக்க முடிகிற சட்டமுள்ள இதே நாட்டில், ஒர் அரசியல்வாதியும் அவரைச் சேர்ந்த இளைஞர்களும் அவற்றைச் சுலபமாகச் செய்ய முடிந்தது. பெரிய இடத்து அத்து மீறல்கள் இயக்கங்களாக வும், புனிதப் போராட்டங்களாகவும் கூட வர்ணிக்கப் படுகின்றன. பாமரக் குடிமகன் நீதிமன்றங்களையும், நீதிபதி களையும், தீர்ப்புக்களையும் அத்துமீறி விமர்சிக்கக் கூடாது. ஆனால், இந்நாட்டின் மிகப் பெரிய பதவிகளில் இருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/191&oldid=562433" இலிருந்து மீள்விக்கப்பட்டது