பக்கம்:சிந்தனை வளம்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 96 சீந்தனை வளம்

இருக்கிற சிலர் அந்த அத்துமீறல்களை நிறையவே செய்திருக்

கிரு.ர்கள். .

நாட்டில் எல்லாவாை அத்துமீறல்களும் அநியாயங்களும் செளகரியம் கருதியும் வசதியை எதிர்பார்த்தும் பாது காப்பை உத்தேசித்தும், வெகு ஜன இயக்கங்களாகவே இங்கு நடத்தப்படுகின்றன.

தனி மனிதன் ஒருவன் டிக்கெட் வாங்காமல் வித் -அவுட் ஆகப் பிரயாணம் செய்தால் அது குற்றம். டில்லியில் தடைபெறும் மாபெரும் இளைஞர் காங்கிரஸ் மாநாட்டிற் காக, ரயில் பெட்டியின் வெளிப்பக்கம் போர்டு மாட்டிக் கொண்டு தைரியமாக டிக்கெட் இல்லாமல் பிரயாணம் செய்ய முடியும். டிக்கெட்டுடனும், குடும்பம்-குழந்தை குட்டிகளுடனும் வருகிற சட்டரீதியான மற்றப் பிரயாணி களை உள்ளே நுழைய விடாமல் துரத்தியடிக்கவும் முடியும். அரசியலின் பெயரால் பல மனிதர்கள் சேர்ந்து திட்ட மிட்டுச் செய்யும் அத்துமீறல்கள் ஆசீர்வதிக்கப்படுகின்றன. சமீபத்தில் பாட்விைல் நடந்த ஒரு சம்பவத்தைப் படித் திருப்பீர்கள். அரசாங்கத்தின் ஃபைல்களை விரைந்து முடிப் பதற்காகக் காலை 10 மணிக்கே எல்லா அலுவலர்களும், அமைச்சர்களும், செக்ரெட்டேரியட்டுக்குக் கருராக வந்து விட வேண்டும் என்றும், 10 அடித்து 5 நிமிஷம் ஆனாலும் ஒருவரும் உள்ளே அனுமதிக்கப்படலாகாது’ என்றும் உத்திரவிடப்பட்டது. - : உத்திரவுக்குச் சில நாட்கள் கழித்து முதல் அமைச்சரே பத்தே முக்காலுக்கு வந்த போது, செக்ரெட்டேரியட்டின் பிரதான வாயிலில் இருந்த ஸெண்ட்ரி கதவைத் திறந்து உள்ளேவிட மறுத்து விட்டான். தான் முதலமைச்சர்' என்று அவர் எடுத்துச் சொல்வியும் காவல்காரன் சர்க்கார் -உத்திரவைச் சொல்வி அவரை உள்ளே விட மறுத்து விட்டான். அப்புறம் அவர் வெளியிலிருந்தபடியே சீஃப் 'செகரெட்டரிக்கு டெலிஃபோன் செய்து, அவர் பதறி ஓடி வந்து இவரை உள்ளே அழைத்துச் செல்ல நேர்ந்திருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/192&oldid=562434" இலிருந்து மீள்விக்கப்பட்டது