பக்கம்:சிந்தனை வளம்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனை வளம் 195.

தாய்-அன்னை என்பவள் தியாக வடிவம். ஒவ்வொரு தாயும் தன் மகனின் மனைவிக்கு மாமியார் தானே? ஒரே பெண். எப்படித் தாயாக இருக்கும் போது தியாக வடிவமாகவும், மாமியாராக இருக்கும் போது கொடுமைக்காரியாகவும். இருக்க முடியும் என்று நீங்கள் கேள்வி எல்லாம் கேட்டுப் பிரயோஜனமில்லை. -

தியாகமோ, மோசமோ எதுவானலும் அதை மிகைப் படுத்தியே சித்திரிக்க நாம் பழகி விட்டோம்: அதனால் நம். கதைகளிலும், படங்களிலும் தியாகமும் நம்பும்படியாக இல்லை; மோசமும் நம்பும்படியாக இல்லை. நம்ப முடியாது’ என்ற ஒரே அம்சம்தான் நம்பும்படியாக இருக்கிறது.

ஒரு தேசம் புத்தியிலும், சிந்தனையிலும் மயக்கமோ, குழப்பமோ இல்லாமல் தெளிவாக இருக்கிறது என்பதற்கு அடையாளம் மிகைப்படுத்தல் குணம் அங்கே குறைவது. தான். மிகைப்படுத் தல் குணம் குன்ருமலே ஆளும் கட்சியும். எதிர்க்கட்சிகளும் அரை நூற்ருண்டாகக் குழந்தைத் தனமாக இருப்பது என்பது வளர்ச்சியின்மையைக் காட்டும். அடையாளங்களில் முக்கியமானது.

சிந்தனையில் ஒரு நிதானம்-அதாவது, பாலன்ஸ்’ வராதவரையில்-படிப்பு, அறிவு, சிந்தனை எல்லாம் பயனற்றவையே. எவ்வளவு நாள் தண்ணிரில் கிடந்து. ஊறினலும் கருங்கல் கரையாதது போல, நிதானத்திலும் காரண-காரிய அறிவிலும் கரைந்து மென்மையடையாத படிப்பால் பயனில்லை. -

இப்படிக் கரைந்து, இளகி மென்மையடையாத மனிதர் கள் அதிகம் இருக்கிரு.ர்கள் என்பதையே நம் நாட்டு நிலை. காட்டுகிறது. - -

திட்டமிட்ட, மிகைப்படுத்தும் நோக்கத்துடன் தரப் படும் தவருன புள்ளி விவரங்கள், சென்ஸேஷனல்’ என்ற பெயரில் கடுகை மலையாக்குவது (மலையைக் கடுகாக்குவதும் சேர்த்துத்தான்) எல்லாம் நம்மிடையே இருக்கின்றன. அளவற்ற வகைகளில், விதங்களில் இருக்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/197&oldid=562439" இலிருந்து மீள்விக்கப்பட்டது