பக்கம்:சிந்தனை வளம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. புதிய வெள்ள மும் பழைய அனேயும்

சர்க்கார் உத்தியோகங்களிலிருந்து ஒய்வு பெறும் வயதை 55-லிருந்து 58-ஆக்கிவிட்டார்கள். ஒருபுறம் இளம் வயதுப் பட்டதாரிகளும், படித்துவிட்டு வேலை இல்லாமல் இருப்பவர்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும்போது, மறுபுறம் ஒய்வு பெறும் வயதை அதிகப்படுத்துவதும், ஒய்வு பெற்றவர்களுக்குத் திரும்பவும் ஏதாவது ஒர் உத்தியோகம் தருவதும் ஆபத்தானது. ஆனால், இன்று ஆபத்துக்கள்தான் நாட்டில் சகஜமாக இருக்கின்றன. -

சமீபத்தில் மிக நாகரிகமாக உடையணிந்த ஒரு வாலிபர், பி. யூ. சி. படித்திருக்கிறேன். கிளார்க், டைப்பிஸ்ட் இது மாதிரி வேலைதான் வேண்டும் என்பதில்லை. பாக்கிங், பார்சல் கட்டுவது இதுமாதிரி ஏதாவது வேலை கிடைத்தால்கூடப் போதுமானது” என்று தேடி வந்து கேட்டபோது நான் ஆச்சரியப்பட்டுப் போனேன். என்னல் அதை நம்பவே முடியாமல் இருந்தது.

"பாக்கிங்-பார்சல் கட்டுவது சம்பந்தமான வேலைக்கு அவரைச் சிபாரிசு செய்து ஒரு காரியாலயத்தில் விசாரித்த போது, பி. யூ. வி. படித்துவிட்டு இந்த வேலைக்கு ஏன் சார் வர் lங்க? வேற ஏதாவது நல்ல வேலையாப் பாருங்க... இந்த மாதிரி முரட்டு வேலையெல்லாம் படிச்சவங்க உடம்பு வணங்கிச் செய்ய முடியாது...” என்று மறுத்துவிட் டார்கள். அவர் பார்சல் கட்டத் தயாராயிருந்தும் வேலை கொடுப்பவர்கள் தயாராயில்லை.

ஏதாவது ஒரு அட்டெண்டர் வேலையாவது கிடைத் தால் போதும் என்று மீண்டும் அவர் மன்ருடினர். பி.யூ.சி. படித்திருக்கிருர் என்ற பீடிகையுடன் அட்டெண்டர் வேலைக் குச் சொல்லி, முயன்றபோது, "சார்! காபி வாங்கிவர,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/20&oldid=562262" இலிருந்து மீள்விக்கப்பட்டது