பக்கம்:சிந்தனை வளம்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனை வளம் 20፰ ̆

ஆக மாறி விடுகிறதோ அப்படியே எதேச்சாதிகாரத்தின் அதீத ருசியைக் கண்ட புலி ஜனநாயக ஈட்டர்’ ஆக மாறி விடுகிறது. சுதந்திரத்தின் எல்லைகள் மிகவும் நுணுக்க மானவை. ஒவ்வொருவனுடைய உரிமையும் அடுத்தவனு. டைய உரிமை என்ற எல்லேயைப் பெற்றிருக்கிறது. சங்கிலிக் . கண்கள் போல் ஒன்று இன்னென்றுடன் சம்பந்தப்பட்டிருக் கும் அமைப்பில், யாரும், எதுவும் தீவு போல் தனித்து வாழ்ந்துவிட முடியாது. -

பலர் கூடிக் கலந்து வாழும் வாழ்க்கையில் ஒருவரை யொருவர் சகித்து, ஏற்று, ஏந்தி ஒப்புக்கொண்டு வாழத் தெரிய வேண்டும். பிறரையும், பிறருடைய உணர்வுகளையும். புரிந்து கொண்டு வாழ முடியாத நிலேயே ஒருவகைச் சர்வாதிகார அறிகுறிதான்.

சுதந்திரம்-சர்வாதிகாரம் ஆகியவற்றின் எல்லைகள் ஆரம்பமாகின்ற இடம்-முடிகிற இடம்-துணுக்கமானவை, -ஜாக்கிரதையானவை. நாகுக்கானவை. - .

ஏனெ னி ல், ஒவ்வொன்றின் ஒவ்வொருவரின்சுதந்திரம் முடிகிற எல்லையில்தான் அடுத்ததின், அடுத்த வரின் சுதந்திரம் ஆரம்பமாகிறது. இந்த எல்லைகள் புரியா விட்டால் சுதந்திரத்தைக் காக்கவும், சர்வாதிகாரத்தைத் தடுக்கவும் முடிவது சிரமமானதே. ,★

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/205&oldid=562447" இலிருந்து மீள்விக்கப்பட்டது