பக்கம்:சிந்தனை வளம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 நா. பார்த்தசாரதி

ஒய்வு பெறும் வயதை உயர்த்துவதும், ஒய்வு பெற்றவர் களுக்கே மேலும் உத்தியோகங்கள் கொடுத்துக்கொண்டிருப் பதும் நாட்டில் குழப்பத்தைத்தான் உண்டாக்கப் போ கிறது. படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர் களின் தொகை பெருகப் பெருக, வம்பும், குழப்பமும், அமைதியின்மையும் பெருகத்தான் செய்யும். அதைத் தவிர்க்க முடியாது.

நன்ருகச் சாணையிட்டுத் தீட்டிய புது அரிவாள்களைத் துருப்பிடிக்கப் போட்டுவிட்டுப் பழைய மொண்ணை அரிவாள் களாலேயே வேலையை நடத்திக் கொள்ளலாம் என்பது போன்றதுதான், இளைஞர்களை விரக்தியடைய விட்டு: விட்டுக் கிழவர்களின் ஒய்வுக்கால வயதை அதிகப்படுத்திக் கொண்டிருப்பது ஒய்வுக் கால வயதை 55-ல் இருந்து ஐம்பதாகக் குறைத்தால்கூட நல்லது.

என்ருே ஒரு காலத்தில் ஏதோ ஒன்று முன்மாதிரியாக. நடந்துவிட்டால் அப்புறம் அதை மறு பரிசீலனை செய்யா மலே கடைப்பிடிப்பது என்பதுதான் நம்நாட்டில் வழக்கம். படித்தவர்கள் குறைவாயிருந்த காலத்தில் ஒய்வு பெற்றவர் களைத் துணை வேந்தர்களாகவும், வேறு பெரிய பதவிகளிலும் நியமித்தார்கள்.

இன்று, கல்வி உலகில் இருபது வருஷம், முப்பது வருஷம் புரொபலராகவும், ரீடராகவும், இருக்கிற சீனியர் ஆட்களுக்கு வைஸ்-சான்ஸ்லர் பதவிகளைத் தராமல், அந்தத் துறையோடு சம்பந்தமே இல்லாத, எங்கிருந்தோ ஒய்வு பெற்று வரும் ஒருவரைத் துணைவேந்தராக நியமிப்பது என்பது கொடுமை. எப்படி இருபது வருஷம் இங்கிலீஷ், புரொபஸ்ராக இருந்து ஒய்வு பெறுபவர், ஒய்வு பெற்ற பின் நீதிபதியாக நியமிக்கப்பட முடியாதோ, அப்படியே பத்து. வருஷம் நீதிபதியாக இருந்து ஒய்வு பெறும் ஒருவர் திடீரென்று அகடெமிக்' துறைக்கு நியமிக்கப்படக். கூடாது. இதல்ை அகடெமிக்’ உலகிலேயே உருவாகும் அனுபவசாலிகளுக்கு வாய்ப்பில்லாமல் போகிறது. ஒய்வு பெற்றபின் பெரும் பதவிகளுக்கு வரும் பலர், தங்களை அப்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/22&oldid=562264" இலிருந்து மீள்விக்கப்பட்டது