பக்கம்:சிந்தனை வளம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 நா. பார்த்தசாரதி

சப்-ரிஜிஸ்திரார் ஆபீஸில் தலைமைப் பதிவாளராக இருப் பதைவிட ஒரு பாங்கில் கிளர்க்காக இருப்பது வருமான ரீதியாகப் பயன் தருகிறது. இதனால் சப்-ரிஜிஸ்திரார் வேறு வழிகளில் பணம் பண்ண நேரிடுகிறது. சர்க்கார் வகை ஆபீஸ்களில் லஞ்சம் பெருகுவதற்கு இதுவும் ஒரு காரண மாகும். சம்பள விகித வித்தியாசங்கள் தவிர்க்கப்பட்டு உழைப்புக்கு ஏற்ற ஊதியம் அமைக்கப்பட வேண்டும்.

ஒய்வு பெறும் வயதை அதிகப்படுத்திவிட்டுப் பள்ளி, கல்லூரிகளில் அட்மிஷனத் தொடர்ந்து பழைய ரீதியில் செய்துகொண்டிருந்தால் ஒர் அணையிலிருந்து தண்ணிர் வெளியேருமலிருக்கும் நிரம்பிய நிலையில், மேலும் மேலும் புதிய தண்ணீர் வந்து நிரம்பிக்கொண்டிருப்பதுபோல் ஆகி விடும். பழைய தண்ணிர் திறந்துவிடப் படாமலே புதிய தண்ணிரையும் தாங்கினல் அணை உடையத்தான் செய்யும். 58வரை ரெகுலர் செர்வீஸ்-அப்புறம் 2 வயது எக்ஸ் டென்ஷன் என்ற ரீதியில் போனல், இன்றுள்ள வேலையில் லாப் பட்டதாரிகள் கணிசமாகத் தொடர்ந்து வேலையின்றித் தேங்கிக் கிடப்பார்கள் என்பது தவிர்க்க முடியாதது.

உதாரணமாக, சர்க்கார் ஆபீஸ்களில் 1979 மார்ச்சில் (55 வயதுக் கணக்குப்படி) ரிட்டையராக வேண்டிய பலர் புதுச் சட்டப்படி (58 வயது நீட்டிப்புப்படி) 1982 மார்ச்சில் தான் ஒய்வு பெறுவார்கள். இதன்படி, வேலைக்குக் காத் திருப்பவர்களின் நீண்ட கியூ இன்னும் மூன்று வருஷத்துக்கு மேலே நகரவே நகராது. நகராத கியூவில் மனத்தாங்கலும், எரிச்சலும், சண்டை சச்சரவுகளும், போட்டிகளும் அதிக மாக ஏற்படும். நடைமுறைச் சிக்கல்களைக் கருதாமலே சட்டங்களைப் போட்டுவிட்டால் பயனே அனுபவித்துத்தான் ஆகவேண்டியிருக்கும். "அவுட்லெட் இல்லாமலே ஒரு பழங்கால அணையில் மேலும் மேலும் (பெரியாறு அணை போல என்று வைத்துக்கொள்ளுங்களேன்) புதிய தண்ணி ரைக் காக்க வைப்பதைவிடக் கோளாருன காரியம் வேறு எதுவும் இருக்க முடியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/24&oldid=562266" இலிருந்து மீள்விக்கப்பட்டது