பக்கம்:சிந்தனை வளம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. நமது புதிய வறுமைகள்

இந்தியாவையும் இந்திய மக்களையும் பொறுத்து ஏழ்மை யும், வயிற்றுப் பசியும் மட்டுமே பெரிய வறுமைகளாகச் சொல்லப்படுகின்றன. எழுதப்படுகின்றன. ஆனால், உண்மை யில் இவற்றைவிடப் பெரிய-இவற்றைவிடப் பயங்கரமான பல வறுமைகள் நம்மிடம் உள்ளன. வயிற்றுப் பசியையும், ஏழைமையையும்விட நம்மை அதிகமாகப் பாதிக்கக்கூடிய வறுமைகள் அவைதான். நுண்ணுணர்வு இன்மையைவிடப் பெரிய வறுமை வேறு ஒன்றுமில்லை என்கிற அர்த்தமுள்ள ஒரு பழைய தமிழ்ப் பாட்டு இருக்கிறது. இந்தத் தமிழ்ப் பாட்டின் கருத்தை அடிப்படையாக வைத்துப் பார்க்கும் போது, வயிற்றுப்பசியைத் தவிரவும் வேறு பல வறுமைகள் இருக்க முடியுமென்று தெரிகிறது. -

ஒருவரது அறியாமையை மன்னிக்கலாம்; அறிய மறுப் பதை எப்படி மன்னிப்பது? புரியாமையை மன்னிக்கலாம்; புரிந்துகொள்ள மறுப்பதை எப்படி மன்னிப்பது? உணரா மையை மன்னிக்கலாம்; உணர்ந்துகொள்ள மறுப்பதை எப்படி மன்னிப்பது?

இன்று உண்மையில் நாம், பலவற்றை அறியாமல் மட்டு மில்லை; அறிந்துகொள்ள மறுத்துக்கொண்டுமிருக்கிருேம் என்பதுதான் உண்மை.

இன்றைய நமது புதிய வறுமைகளில் முதலில் வருவது விரைவாகப் பெருகிவரும் கலாசார வறுமை. சிலைகள், கோவில் தேர்களின் பகுதிகள், பஞ்சலோக விக்கிரகங்கள் இவற்றை அந்நிய நாட்டுக்குக் கடத்தி விற்பவர்களைப்பற்றி அதிகம் கேள்விப்படுகிருேம். சிலர், இவற்றைக் கடத்தி விற்கும் நம்மவர்களைக் குறை கூறுவதற்குப் பதில், இவற்றை மதித்து விலை கொடுத்து வாங்கும் அந்நியர்களைக்குறைகூறிக் கண்டபடி தூற்றுகிருேம். எய்தவன் இருக்க அம்பை நோவதில் பயன் என்ன? .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/26&oldid=562268" இலிருந்து மீள்விக்கப்பட்டது