பக்கம்:சிந்தனை வளம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனை வளம் 25

நமது சிலைகள், நமது கலைகள், நமது சங்கீதம், நமது பரத நாட்டியம் நமது பழஞ் சிறப்புக்கள் எல்லாவற்றையும் எந்த நிலையிலும், எந்த விலையிலும் விற்றுவிட, அல்லது விட்டுவிட நாம் தயாராயிருக்கிருேம். அவற்றை வாங்கவும், பாதுகாக்கவும், இரசிக்கவும், பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளவும் மேற்கு நாட்டுக்காரர்கள் தயாராயிருக்கிருர் கள். எதையும் வரவேற்று மதிக்கத் தயாராயிருக்கும் மனிதர்கள் ஒரு பக்கம். எதையும் விற்கவும் இழக்கவும் தயாராயிருக்கும் நாம் ஒரு பக்கம்.

நம்முடைய கோவில்களில் தேவாரம், திருவாசகம், திருவாய்மொழி படிப்பவர்களை ஏளனமாகப் பார்க்கிருேம். ஷேக்ஸ்பியரையும், மில்டனையும் கொண்டாடுகிருேம். கம்பராமாயணம் படிப்பதைப் பெருமையாக நினைப்ப தில்லை. தமிழை வாழ்த்துகிருேம். ஆங்கிலத்தைக் கொண்டாடுகிருேம்.

தாய் மொழியைப் பிழையாகவும், தவருகவும், படுமோசமாகவும் எழுதுவதற்குக் கூசுவதில்லை. ஆங்கிலத் தில் ஒரு ஸ்பெல்லிங் மிஸ்டேக் வந்தால்கூடக் கூசுகிருேம்.

கூச வைக்கிருேம்.

உலகின் பல நாடுகளை நேசத்திலும், நல்லெண்ணத் திலும் வைத்துக் கொள்வதற்காகவும், எல்லா நாடுகளின் கலாசார உறவுக்காகவும், கலாசாரச் செல்வங்களை மதிப் பதற்காகவும் அமெரிக்காகவும், ரஷ்யாவும் போட்டி போட் டுக்கொண்டு முயல்கின்றன. - -

நாமோ நமது கலாசாரப் பிடிப்புள்ள சங்கீதம், நாடகம், நாட்டியம், கோவில்கள், குளங்கள், தேர்' திருவிழா, தெருக்கூத்து, கிராமியக் கலைகள் எல்லாவற்றை யும் மெல்ல மெல்ல மறந்தும் துறந்தும் வருகிருேம்.

இன்னும் பத்து வருஷங்களுக்குப் பின் கர்நாடக சங்கீதத்தின் கதி என்னவாக இருக்கும் என்று எண்ணிப் பார்க்கவே பயமாயிருக்கிறது. நாகரிக வளர்ச்சியிலும் தகர வளர்ச்சியிலும் தன் புராதனமான பண்பாடுகளையும், கலாசாரத்தையும் இழக்காத தேசம்தான் மானமுள்ள தேசமாயிருக்க முடியும். - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/27&oldid=562269" இலிருந்து மீள்விக்கப்பட்டது