பக்கம்:சிந்தனை வளம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 நா. பார்த்தசாரதி

விமான நிலையத்தில் வந்து இறங்கும் தோற்றத்தையும். பஞ்சகச்சம், உச்சிக்குடுமி, நாமம், விபூதியோடு ஒரு சிலர் நாகரிக இளைஞர்களின் மத்தியிலே நடந்து போனலே கேலி செய்யும் நம் நாட்டு மனப்பான்மையையும் ஒப்பிட்டு எண்ணிப்பார்க்கும்போது எனக்கு வேடிக்கையாயிருக்கிறது. உடை, சின்னம், தோற்றம்இவை எல்லாம் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் சொந்தமானவிஷயங்கள். கறுப்பு-சிவப்புத் துண்டு, இரட்டை இலேக் கரை வேஷ்டி, உதயசூரியன் கரை வேஷ்டி எல்லாம் எப்படிச் சின்னங்களோ அப்படித்தான் விபூதிப் பூச்சு, நாமம், தார் வைத்து வேஷ்டி கட்டுவது ஆகியவையும் சிலரது தனிப்பட்ட பழக்க வழக்கங்கள். - பண்பாட்டுக் குறைபாடுகளில் மிகவும் கேவலமான அம்சம் பிறர் உண்பதையும், உடுப்பதையும் கேலி செய்து மகிழ்வது. இன்றைய இளைஞர்களிடம் எதையும் (தெருவில் நடக்கும் பெண்கள், கிரிக்கெட்டில் தங்களுக்குப் பிடிக்காத ஆட்டக்காரர். கற்பிக்கும் ஆசிரியர், படிக்கும் பாடங்கள், இன்னும் பலப்பல) கேலி செய்து மகிழ்கிற பழக்கம்தான் அதிகமாக இருக்கிறது. பிறரைக் கேலி செய்து மகிழ்கிற பழக்கத்தைப்போல் அநாகரிகமான பழக்கம் வேருென்று இருக்க முடியாது. கலாசாரம், இலக்கியம், மொழி, பெண் களின் அழகு, பண்பாடு போன்ற பல விஷயங்களை நம் இளைஞர்கள் இன்னும் கேலி செய்து சிரித்து மகிழ்வதற்குரிய பண்டங்களாகவே எண்ணி வருகிரு.ர்கள்.

இங்கு உருவாகி வரும் புதிய வறுமைகளின் அடையாளமே பிறர் நோகக் கேலி செய்து மகிழும் இந்தப் பழக்கம்தான், இந்த மாதிரியான போக்கு ஒரு வளரும் நாட்டுக்கு நல்லதில்லை. - - 食

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/30&oldid=562272" இலிருந்து மீள்விக்கப்பட்டது