பக்கம்:சிந்தனை வளம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8Ꮾ நா. பார்த்தசாரதி

யாவது பண்ணி, எப்படியாவது சர்க்குலேஷனை உயர்த்த, முயல்கிரு.ர்கள்.

ஆக, இதை இப்படித்தான் செய்து வாழ வேண்டும். என்ற பழைய வாழ்க்கை தர்மங்கள் போய், எதையாவது எப்படியாவது செய்து வெற்றி பெறலாம், வாழலாம். பிறரைக் கவருகிற விதமாக வாழ்ந்தால் போதும். அந்த மாதிரி வெற்றிகரமான வாழ்வை அடைவதற்கான மார்க் கங்கள் எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்று ஏற்றுக் கொள்வதுதான் சரி என்று சமூகமும், அறிவாளிகளும் சமீப காலமாகப் பெரிதும் நிர்ப்பந்திக்கப்படுகிரு.ர்கள்.

பலாத்காரமான இந்த நிர்ப்பந்தத்திற்கு அவர்கள் ஒத்து வரவில்லை என்ருல் அவர்களை மாஜிகள்’, 'பத்தாம்பசலிகள்’, "பிழைக்கத் தெரியாதவர்கள்’ என்று ஏசவும், கிண்டல் செய்யவும், துாற்றவும், சீண்டி விடவும்கூடத் தயாராயிருக். கிருர்கள் திடீர் வெற்றியாளர்கள்.

ஒன்றில் அடையும் வெற்றியைப் போலவே அதற்கான மார்க்கமும் நியாயமானதாக இருக்க வேண்டும்’ என்ற கொள்கையைச் சகல துறைகளிலும் நாம் இழந்து வருகிருேம் என்பதைத்தான் இது காட்டுகிறதா? அல்லது வேறு எதைக் காட்டுகிறது?

இந்த எதையாவது எப்படியாவது கலாசாரம்' இன்று நமது வாழ்க்கையின் சகல துறைகளிலும் ஊடுருவி விட்டது. என்றே சொல்ல வேண்டும். ஒருவேளை இதுதான் நமது சுதந்திரத்திற்குப் பிந்திய இந்தியாவின் கலாசாரமாகவே வளருகிறதோ என்னவோ?

விளையாட்டில் ஒட்டப் பந்தயத்துக்குக்கூட நியாயங்கள் இருக்கின்றன. இரண்டு கிலோ மீட்டர் துார ஒட்டப் பந்தயத்தில் பத்துப் பேர் ஓடுகிறபோது அதில் இரண்டு பேர் மட்டும் பாதி வழியில், ஒரு புல்லெட் மோட்டார்சைக்கிளில் ஏறிக்கொண்டு விரைந்து பந்தய முடிவிடத்திற்குப் போய்த் தாங்களே வென்று விட்டதாகப் பிரகடனப்படுத்திக் கொள்ள முடியாது. அது நிச்சயமாகப் பந்தய விதிகளுக்கு, முரளுன காரியம் என்றுதான் எல்லாருமே கூறுவார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/32&oldid=562274" இலிருந்து மீள்விக்கப்பட்டது