பக்கம்:சிந்தனை வளம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனை வளம் - 3 #."

ஆனல் வாழ்க்கைப் பந்தயத்தில் மட்டும் எதையாவது: பண்ணி எப்படியாவது ஜெயிக்கலாம் என்ற மனப்பான்மை, எங்கும் பரவி வருகிறது.

'முடிவுதான் மார்க்கத்தை நியாயப்படுத்துகிறது. நான் ஜெயித்து விட்டால் எனது வெற்றிக்கான மார்க்கம், எவ்வளவு தவருனதாக இருந்தாலும் அது சரியானதாகி விடுகிறது என்றும், நான் தோற்றுவிட்டால் எனது வெற்றியை எதிர்பார்த்து நான் நடந்து வந்த வழி எவ்வளவு: சரியானதாக இருந்தாலும் அது தவருனதாகி விடுகிறது’ என்றும் இன்று கூறப்படுகிறது. இது அபாயகரமான தத்துவம் ஆகும்.

இதன்படி, மதுவிலக்கு அமலிலுள்ள ஊரில் கள்ளச் சாராயம் விற்றுக் குபேரளுகி விடுகிறவன் சரியான மார்க்கத் தில் வந்தவனகி விடுகிருன். சர்பத்’ வியாபாரம் செய்து. நொடித்துப் போனவன் தவருண மார்க்கத்தில் வந்தவனகி விடுகிருன். எப்படி இருக்கிறது நியாயம்? " .

சட்டப்படி தடை செய்யப்பட்ட ஒன்றை மக்களிடம் இரகசியமாக விற்று அவசரமாகப் பணம் பண்ணிக்கொண்டு, சட்டம் தன்னைத் தேடி வருவதற்குள் தலை மறைவாகி விடுகிற ஒருவனின் அவசரமும், பதற்றமும், பேராசையும், தான் இன்று பரீட்சை எழுதுகிறவர்களிலிருந்து பத்திரிகை. நடத்துகிறவர்கள் வரை காணப்படுகிறது. நடக்கிறவர்களை யும், காலால் ஒடுகிறவர்களையும் நொண்டிகள்’ எனத் துாற்றி விட்டுப் பந்தய விதிக்கு முரணுக நடுவழியில் மோட்டார் சைக்கிளில் ஏறி ஒடி ஜெயிக்கிறவர்கள் தங்களை சூராதி சூரர்களாகக் காட்டிக் கொள்கிற நிலைமை உருவாகி: வருகிறது. இந்த குயுக்தியான தத்துவத்தின்படி பார்த்தால், மகாத்மா காந்தியைவிட கடத்தல் மன்னன் ஹாஜி: மஸ்தான்தான் இந்தியாவின் மிகச் சிறந்த வெற்றியாளர். என்றுகூடக் கூறி விடுவார்கள் போலிருக்கிறது.

'எதையாவது எப்படியாவது 'பிலாஸ்பி’காரர்களுக்கு. முதல் எதிரி தவறுகளைச் சுட்டிக் காட்டுபவர்கள்தான். தவறுகள் செய்து அமோக வெற்றிகளை அடைந்த பின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/33&oldid=562275" இலிருந்து மீள்விக்கப்பட்டது