பக்கம்:சிந்தனை வளம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. படித்தவர்கள் பயப்பருகிருர்கள்

புத்தியே இல்லாதவனைக்கூட நம்பலாம். புத்தியை அவ்வப்போது இடம் மாற்றி அடகு வைக்கிறவனே நம்பவே கூடாது. அறிவாளிகளும், புத்திமான்களும், ஞானிகளும், மகான்களும் கடந்த காலங்களில் ஆட்சிகளிலோ, சமூகத் திலோ நடைபெறும் தவறுகளையும், பிழைகளையும் துணிந்து உரத்த குரலில் கண்டித்துத் திருத்துகிற பொறுப்பைத் தயங்காமல் ஏற்றிருக்கிரு.ர்கள். ஏற்கவேண்டும். படிப்பும், ஞானமும் மெய்யாகவே வளர்ந்தால் பயமும், பாவமும், அஞ்ஞானமும், சூதும் தொலைய வேண்டும். இருள் நீங்கு வதற்காகத்தான் விளக்குக்களே ஏற்றுகிருேம்.இருளை வளர்ப் பதற்காக அல்ல.

'படிப்பு வளருது பாவம் தொலையுது -

படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினுல் போவான் போவான் ஐயோவென்று போவான்’

என்று மகாகவி பாரதியார் தமது புதிய கோணங்கி’ என்னும் குடுகுடுப்பைக்காரன் பாடலில் சொல்லியிருக் கிரு.ர். -

ஆனால், இன்று நாட்டில் படித்தவர்கள் பண்ணுகிற சூதும், பாவமுமே அதிகம். பாமரர்கள் எது சூது, எது பாவம் என்று தெரியாமலே சிலவற்றைத் தவருகச் செய்து விடுகிருர்கள். பின்பு அவை சூதுகளாகவும், தவறுகளாகவும் கண்டுபிடிக்கப்படுகின்றன. -

படித்தவர்களோ, திட்டமிட்டு லாபம் கருதிச் சூதும். பாவமும் பண்ணுகிருர்கள். ஒன்றைத் தவறு, தீமை, சூது, பாவம் எ ன் .ெ ற ல் லாம் .ெ த ரி ந் து வைத்துக் கொண்டே அதை மாலை மரியாதை, கரகோஷம், மேள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/37&oldid=562279" இலிருந்து மீள்விக்கப்பட்டது