பக்கம்:சிந்தனை வளம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 நா. பார்த்தசாரதி

தாளத்தோடு நடத்தி முடித்து அதற்காகப் பொன்னடை போர்த்திக் கொள்கிற சாமர்த்தியம் இன்றைய அறிவாளி களில் பலருக்கு இருக்கிறது. நாளைய அறிவாளிகள்’ அதற்குப் பயிற்சி பெற்று வருகிருர்கள்.

ஒரு செயலின் மூலம் புத்திக்கூர்மையை வெளிப்படுத் தும் அறிவாளிகளைவிட, மந்த புத்தியையும், அறியாமையை யும் வெளிப்படுத்தும் அறிவுத் தொழிலாளிகளே அதிகம். அறிவு ஒரு கெளரவமாகவும், மரியாதையாகவும், மான மாகவும் கருதப்பட்ட காலம் போய் ஒரு வசதியாகவும், தொழிலாகவும், சாதனமாகவும் மட்டுமே கருதப்படுகிற காலத்திலே நாம் வாழ்கிருேம்.

வயிற்றுக் கொடுமை தாளமுடியாமல் பூசாரியே விக்கிரகத்தை அடகு வைப்பது போலவும், சிற்பி உளியை அடகு வைத்துத் தேநீர் குடிப்பது போலவும், இன்றைய அறிவாளிகளில் பலரும் ஆகிவிட்டார்கள்.

ஒரு நாட்டின் அறிவாளிகள் துதிபாடிகளாகவும், தொழுது நிற்பவர்களாகவும், அடி வருடிகளாகவும் ஆகி விட்டால், அன்றுதான் அந்த தேசத்தில் உண்மையான வறட்சியும், பஞ்சமும் ஏற்படுகின்றன.

சோற்றுப் பஞ்சத்தைவிட மோசமானது புத்திப் பஞ்சம். புத்திப் பஞ்சைத்தைவிட மோசமானது தைரியப் பஞ்சம். தைரியப் பஞ்சத்தைவிட மோசமானது மனச் சாட்சிப்பஞ்சம். கருத்துப்பஞ்சம், சோற்றுப் பஞ்சத்தைவிட மோசமானது. -

தண்ணிரில் எண்ணெய் கலக்க முடியாதது போல, அசல் ஞானத்தில் கோழைத்தனம் கலக்கவே முடியாது. உதாரணம்-நக்கீரன். இடம், பொருள் ஆள்கட்டு, சாபம் கொடுக்கும் ஆற்றல், எதற்குமே பயப்படாமல், நெற்றிக் கண்ணத் திறந்தாலும் நீங்கள் செய்த குற்றம் குற்றமே” என்று எதிர்ப்புக் குரல் கொடுத்தானே ஓர் அறிவாளி, அவனை எப்படிப் போற்றுவது? அறிவாளிகள் சுய சிந்தனை யும், சுயமரியாதையும் அற்ற அடிவருடிகளாக இருக்கக் கூடாது என்பதற்குக் கிடைத்த முதல் உதாரணம் நக்கீரன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/38&oldid=562280" இலிருந்து மீள்விக்கப்பட்டது