பக்கம்:சிந்தனை வளம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனை வளம் 37

போகிற போக்கைப் பார்த்தால் கடைசி உதாரணமாக வும் அவன்தான் இருப்பானே என்று சந்தேகமாக இருக் கிறது எனக்கு. -

தத்தம் பலவீனங்கள் காரணமாக அறிவாளிகள் அடி வருடிகளாகவும், துதிபாடிகளாகவும் இருக்க நேரிடுவது தவிர, இப்போது புதுவித அபாயம் ஒன்றும் ஏற்பட்டிருக் கிறது. ஆட்சியாளர்கள், பொறுப்புக்களில் இருக்கும் நிர்வாகிகள் ஆகியவர்களே அறிவாளிகளும், சிந்தனையாளர் களும் தங்களுக்கு அடிவருடிகளாகவும், துதிபாடிகளாகவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிருர்கள். வற்புறுத் தவும் செய்கிரு.ர்கள்.

அப்படி யாராவது இல்லையென்ருல் ஆட்சியாளர்களுக் கும், பொறுப்பிலுள்ளவர்களுக்கும் அவர்கள் மேல் கோபம் வருகிறது. முட்டாள்களின் கோபத்துக்குப் பயப் படும் அறிவாளிகளாகவே ஒரு நாடு முழுவதும் நிரம்பி விட்டால் கேட்கவே வேண்டாம்.

நாடு முழுவதும் உள்ள அறிவாளிகள் எப்படி, எந்தப் போக்கில் சிந்திக்க வேண்டுமென்று ஆள்பவர்களே முடிவு செய்து விடலாமா? -

தமிழ் நாட்டில் உள்ள அறிஞர்களும், சிந்தனையாளர். களும் எப்படி எந்தப் போக்கில் சிந்திக்க வேண்டும் என்று இங்குள்ள அதிகாரிகளே முடிவு செய்து விடலாமா?

சக்தியுள்ள திருடன் தங்களைத் தேடி வந்து பறிப்பதற் குப் பதில் பலவீனமும், பயமுமுள்ள உடைமையாளர்களே திருடனின் வீட்டைத் தேடிச் சென்று அவற்றை ஒப்படைத் துப் பாதகாணிக்கையாக்கி விட்டுத் திரும்புகிற மாதிரித் தான், அறிவாளிகளே வலுவில் பதவியிலுள்ளவர்களிடம் சரணடைவதும். அடிமைத்தனங்களில் எல்லாம் மோச மானது சிந்தனை அடிமைத்தனமே. கட்டுப்பாடு, தேசிய ஒற்றுமை ஆகியவற்றின் ஒரே சின்னம் நமது இன்றைய பிரதமர்தான்-என்று அறிக்கை விடும் சில அறிவாளிகள்’

சி.-3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/39&oldid=562281" இலிருந்து மீள்விக்கப்பட்டது