பக்கம்:சிந்தனை வளம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

苏悉 - நா. பார்த்தசாரதி

சரளுகதி தத்துவத்தை நம்பியே அப்படி அறிக்கை விடுகிரு.ர்கள். மூளை பலத்தை நம்பி அன்று.

  • இன்று கடன் நாளை ரொக்கம்’ என்ற போர்டைப் போல், என்று எவர் பிரதமராக வந்தாலும் இப்படி அறிக்கை விடத் தயாராயிருக்கும் ஃபிளெக்ஸிபிள் அறிவாளி களின்’-கூட்டம் ஒன்று இந்த நாட்டில் ரெடிமேடாகக் காத்திருக்கிறது. -

ஒருவருடைய படிப்பு, அல்லது கல்வியின் விகிதாச் சாரத்தைக் கண்டுபிடிக்க அவரிடமுள்ள பயம், பதற்றம் ஆகியவற்றின் விகிதாச்சாரத்தைக் கண்டு பிடித்தாலே போதுமானது. ஐ. க்யூ"வின் மீட்டர் அதுதான்.

பயம் எல்லாப் பாவங்களுக்குமே தந்தை. பயம்தான் ஒருவனை அடிவருடியாக்குகிறது. பயம்தான் ஒருவனைத் துதிபாடியாக்குகிறது. பயம்தான் ஒருவனைத் தகுதி யில்லாததை, தகுதியில்லாதவரைப் புகழ வைக்கிறது. பயம்தான் பரந்த எண்ணத்தின் வீரியத்தைக் கட்டுப்படுத்து கிறது. பயம்தான் ஒருவனுடைய சுதந்திர மனப்பான்மை யைக் கொல்கிறது.

இந்நாட்டில் இன்று செய்ய வேண்டிய பணி அறியாமையை அகற்றுவது மட்டுமல்ல; அறியாமையை அகற்றும் முன், காரணமற்ற அச்சத்தை முதலில் அகற்ற வேண்டும். அச்சமும், கோழைத்தனமும், பேடிமையும் நீங்காத கல்வி என்பது, எதற்கும் பயன்படாத வறட்டுப் படிப்பே. இருட்டைப் போக்காத விளக்கு விளக்கே இல்லை. ஒரு நாட்டு மக்கள் எந்த அளவுக்குச் சுதந்திரத்திற்குப் பக்குவப்பட்டிருக்கிருர்களோ, அந்த அளவு சுதந்திரம்தான் அவர்களுத்திருக்குக் கிடைக்க முடியும். இன்று நமக்குக் கிடைக்கிற சுதந்திரம் எதுவோ அவ்வளவிற்குத்தான நாம் பக்குவப்பட்டிருக்கிருேம்? - - - ★

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/40&oldid=562282" இலிருந்து மீள்விக்கப்பட்டது