பக்கம்:சிந்தனை வளம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. ஆங்கிலமும் தாழ்வுமனப் பான்மையும்

சுதந்திரம் அடைந்து முப்பத்து மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் மொழி தொடர்பான அடிமை மோகம் நம் மிடையே இன்னும் குறையவில்லை. ஆஷாடபூதித்தனங்கள் இன்னும் போகவில்லை.

நமது நகரங்களில் தொத்து நோய் போல் எல். கே.ஜி., யு. கே. ஜி. பள்ளிகள் தோன்றி வளர்கின்றன. இப் பள்ளிகளில் பல, ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும் பயிற்சி யளிப்பதற்கு முயன்று, முடிவில் தோற்று, தாய் மொழியில் பேசவும், எழுதவும் முடியாமல் போவதற்கு மட்டுமே பயிற்சியளிக்கின்றன.

இப்பள்ளிகளில் தயாராகி வெளி வருகிற பலர் முழுவது மாகத் தாய்மொழியிலும் பேச முடிவதில்லை. முழுவதுமாக

ஆங்கிலத்திலும் பேச முடிவதில்லை.

"ஐ n...யூ நோ...அஃப் கோர்ஸ்... இப்படி நடு நடுவே ஆங்கிலச் சொற்களையும், தொடர்களையும் தெளித்துச் தமிழ்ச் சொற்களேயும், தொடர்களையும் நடு நடுவே கலந்து பேசும் ஓர் அரை வேக்காட்டு மொழியை இவர்கள் பேச்சி லும்-எழுத்திலும் உருவாக்கி வருகிருர்கள்.

தாய் மொழியைச் சரியாக அறியாமல்-அவ்லது அறிந்து கொள்ள மனமில்லாமல் அலட்சியப்படுத்தி விட்டு, அந்நிய மொழிகளைக் கொண்டாடுவதும், கற்பதும் அடிமைத்தனங் களில் எல்லாம் தலைசிறந்ததாகும். துரதிஷ்டவசமாக இந்த அடிமைத்தனம் தமிழர்களிடையே மிகவும் அதிகமாக இருந் தது.இன்னும் இருக்கிறது. -

சராசரி மலையாளியும் வங்காளியும், மலையாளமும் வங் காளமும் தெரியாத வேற்று மொழியாளனிடமும் பேச நேரும் போதுதான் ஆங்கிலத்தின் துணையை நாடுகிருர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/41&oldid=562283" இலிருந்து மீள்விக்கப்பட்டது