பக்கம்:சிந்தனை வளம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

소() நா. பார்த்தசாரதி

ஆனல், சராசரித் தமிழன் தமிழ் நன்ருகத் தெரிந்த மற்ருெரு தமிழனிடமே தாழ்வு மனப்பான்மை காரணமாக வும், உயர்வு மனப்பான்மை காரணமாகவும் ஆங்கிலத்தில் பேசுகிருன்.

ஆங்கிலம், சம்ஸ்கிருதம், இந்தி, பிரெஞ்சு ஆகிய நான்கு பிறமொழிகளைத் தெரிந்திருந்த மகாகவி பாரதியார் தாய்மொழிப் பற்றின் சிகரத்தில் நின்று கொண்டு, "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது: எங்கும் காணுேம்' - என்று பாடினர்.

தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட பெரிய குடும் பங்களில் பிறந்த பலர், தமிழர்களால் தமிழில் எழுதப் பட்ட நூல்களுக்கு ஆங்கிலத்தில் முன்னுரை வழங்குவதை அந்தஸ்தாகக் கருதினர்கள். இந்த விநோதம் உலகில் வேறெங்கும் நடக்க முடியாது.

மிகப் பெரிய பணக்காரக் குடும்பங்களில் வைதீக மொழியின் இடத்தை சம்ஸ்கிருதமும், லெளகீக மொழியின் இடத்தை ஆங்கிலமும் பிடித்துக்கொண்டதன் காரணமாகத் தாய்மொழியாகவும், பிரதேச மொழியாகவும் இருக்கும். தமிழ் அநாதையாயிற்று.

என் நண்பர் ஒருவர் அடிக்கடி சிரித்துக் கொண்டே, "உலகின் எந்த மூலையிலாவது தப்புத் தப்பான அரைகுறை. ஆங்கில்த்தில் இரண்டு பேர் போலியாக உரையாடிக் கொண்டிருந்தால், அவர்கள் இருவரும் தமிழர்களாகத்தான் இருக்க வேண்டும் என்று விசாரிக்காமலே முடிவு செய்து கொள்ளலாம்’ என்று கூறுவார். அவர் கூற்று, நகைச் சுவையாக (மிகைப்படுத்தப்பட்ட வேடிக்கையன்று. உண் மையே என்பதை நான் பலரைப் பார்த்து முடிவு செய்திருக் கிறேன். - -

ஒருவன் தாய் மொழியைத் தவிர வேறு மொழியைப் பேசுவதோ, எழுதுவதோ, மதிப்பதோ தவறு: என்று நான் சொல்ல வரவில்லை. தாய்மொழியை அவ. மதித்து விட்டு வேறு மொழிகளைத் தாழ்வு மனப்பான்மை, யிலுைம், உயர்வு மனப்பான்மையிலுைமே மதிக்கிறவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/42&oldid=562284" இலிருந்து மீள்விக்கப்பட்டது