பக்கம்:சிந்தனை வளம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனை வளம் 4夏

எவனே அவன் ஆஷாடபூதி என்பதைத் தான் வற்புறுத்த விரும்புகிறேன்.

டாக்டர் பட்டம் பெற்ற தமிழ்ப் பேராசிரியர். ஒரு வரும், நானும் ஒரு கல்லூரியில் முத்தமிழ் விழாவில் பேசப் போயிருந்தோம். விழாவைத் தொடங்குவதற்கு முன் கல்லூரி முதல்வர் அறையில் முதல்வருடன் (அவரும் தமிழர்தான்) செயற்கையாக ஆங்கிலத்திலேயே வலிந்து சொற்களைத் தேடித் தேடிப் பேசிக் கொண்டிருந்தார் தமிழ்ப் பேராசிரியர். நான் தமிழிலேயே பேசிக் கொண்டி ருந்தேன்.

முத்தமிழ் விழா தொடங்கி மேடைக்கு வந்து பேசிய போது அதே பேராசிரியர், தமிழர்கள் தங்களுக்குள் செயற்கையாக ஆங்கிலத்தில் உரையாடிக் கொள்வது" பற்றிக் கிண்டல் செய்தும், கண்டித்தும், சாடியும் முழங் கினர். அவரை அடுத்து நான் பேசியபோது, தமிழில் பேச வேண்டுமென்று மேடையில் முழங்கிவிட்டு ஆங்கிலத் தில் பேசும் கொள்கை முரண்பாடுள்ளவர்கள் வெகு தொலை வில் இல்லை. நம் அருகிலேயேகூட இருக்கிரு.ர்கள்’ என்று குத்திக் காட்டியபோது கல்லூரி முதல்வர் என்னைப் பார்த் துப் பொருள் பொதிந்த புன்னகை புரிந்தார். பேச்சளவில், மேடையளவில் தமிழ் உணர்ச்சியைப் கொட்டிக் குமுறி விட்டுத் தனி வாழ்வில் தமிழ் உணர்ச்சியே இல்லாமல் வாழும் ஆசாரக் கள்ளர்கள் நிறையவே இருக்கிரு.ர்கள். ஒரு தமிழ்க் கட்டுரையிலோ, சொற்பொழிவிலோ அதிகமான ஆங்கிலச் சொற்ருெடர்களோ மேற்கோள் களோ இருக்குமாளுல் எழுதியவர் அல்லது பேசுகிறவர் தமிழ்ப் பேராசிரியர் என்று கண்டுபிடித்து விடலாம். திருக்குறள் அல்லது கம்பராமாயண மேற்கொள்களுடன் நல்ல தமிழில் அதே கட்டுரையோ, பிரசாங்கமோ அமையு மால்ை எழுதியவர் ஆங்கிலத்தில் பெரும் புலமையுள்ளவர் என்று கண்டுபிடித்து விடலாம்.

இந்த முரண்பாட்டுக்கு என்ன காரணம்? தாய்மொழி அல்லது சுதேசி மொழி அறிஞர்களுக்கு ஆங்கிலம் சம்பந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/43&oldid=562285" இலிருந்து மீள்விக்கப்பட்டது