பக்கம்:சிந்தனை வளம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனை வளம் 垒品

டாட மறுக்கிருேம். நம்நாட்டு மொழிகளைக் கேவலமாக எண்ணியபடி அந்நிய மொழிகளை மதித்துக் கற்கிருேம்.

தேசத்தை மட்டும் அந்நியர்களிடமிருந்து மீட்டு, விடுதலை பெற்றுவிட்டோம். ஆனல் பல விஷயங்களில் நமக்கு இன்னும் விடுதலை கிடைக்கவில்லை. சுதேசி எண்ணங் கள் வரவில்லை. சுதேசி மொழிகளை மதித்து வழிபடக் கற்க வில்லை.

ஐரோப்பாவிலேயே இங்கிலாந்துக்கு அண்டை நாடு களான பிரான்ஸிலும் ஜெர்மனியிலும்கூடப் பிரெஞ்சு மொழியையும், ஜெர்மன் மொழியையும்விட ஆங்கிலத்தை உயர்வாக மதிப்பதில்லை. ஆனால், ஆருயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள நாமோ சுதேசி மொழிகளைக் கிண்டல் செய்துகொண்டே விதேசி மொழிகளுக்கு அடிமைச் சேவகம் புரியக் காத்திருக்கிருேம்.

சுதந்திரம் என்பது சொல்லிக் கொடுத்து வரக்கூடிய உணர்வில்லை. தாழ்வு மனப்பான்மை உள்ளவன் சுதந்திர மாக இருப்பதுபோல் பாசாங்கு செய்யலாம். ஆனால், நிஜமாகவே சுதந்திரமாக இருக்க அவளுல் முடியாது. அப்படி இருக்க அவனுக்குத் தெரியவும் தெரியாது. தாய் மொழி அபிமானமற்ற அந்நிய மொழி மோகங்கள் எல்லா வற்றுக்குமே தாழ்வு மனப்பான்மையும், அடிமைப் புத்தியுமே காரணங்கள் என்பது என் உறுதியான முடிவு ஆகும். ★

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/45&oldid=562287" இலிருந்து மீள்விக்கப்பட்டது