பக்கம்:சிந்தனை வளம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. நமது பண்பாட்டுப் பஞ்சங்கள்

அரிசிப் பஞ்சம், சர்க்கரைப் பஞ்சம், மண்ணெண் ணெய்ப்பஞ்சம் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிருேம். அந்தப் பஞ்சங்கள் எல்லாம் அவ்வப்போது ஏற்படுகின்றன, தீர்கின்றன. சில பஞ்சங்கள் தேர்தல்களில் அரசியல் கட்சி களின் வெற்றிக்கும், வேறு சில பஞ்சங்கள் அரசியல் கட்சி களின் தோல்விக்கும் பயன்பட்டிருக்கின்றன.

ஒரு நாட்டின் சோற்றுப் பஞ்சம், தண்ணிர் பஞ்சம் எல்லாமே கண்ணுக்குத் தெரியக் கூடிய வெளிப்படையான பஞ்சங்கள்,

அவற்றைத் தீர்க்கப்போவதாகவும், ஒழிக்கப்போவ தாகவும், விரட்டப்போவதாகவும் சவால் விட்டுப் பிழைப் பவர்கள் பலர், ஆனல் யாரும் தீர்க்கவோ, விரட்டவோ முயலாமல் கண்ணுக்குத் தெரியாத நுணுக்கமான பஞ்சங் கள் சில இப்போது நம் நாட்டில் வளர்ந்து வருகின்றன,

அதில் முக்கியமானது பண்பாட்டுப் பஞ்சம். கலாசாரப் பஞ்சம், நாகரிக வறுமை, பண்பாட்டு வறட்சி ஆகியவை இன்று பெருகியிருப்பதுபோல் இதற்கு முன் என்றும் பெருகி யிருந்ததில்லை என்று தோன்றுகிறது. அரசியல். வர்த்தகம், கல்வி முதலிய சகல துறைகளிலும் இன்று பண்பாட்டுப் பஞ்சம் பெருகியிருக்கிறது . - -

இந்தப்பஞ்சம் ஒரிடத்தில், ஒரு வடிவத்தில் ஒரு சமயத் தில் தெரிவதில்லை. பல இடங்களில், பல வடிவங்களில், பல சமயங்களில் இது கண்ணுக்குத் தெரிகிறது. சுதந்திரமும், ஜனநாயகமும், உரிமைகளும், வசதிகளும் பெருகி (?) அறவே பண்பாடு பெருகாத தேசத்தை என்னவென்பது? பண்பாடு இல்லாத வசதி, பண்பாட்டைக் கற்றுத் தராத வறட்டுக் கல்வி இரண்டுமே பயனற்றவை ஆகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/46&oldid=562288" இலிருந்து மீள்விக்கப்பட்டது